பிற மாநில பேருந்து கட்டணத்தை காட்டிலும் தமிழக பேருந்துகளில் கட்டணம் குறைவு

தமிழகத்தை போல கர்நாடகாவில் பெண்களுக்கு இலவச பயண அனுமதி வழங்க வேண்டும் என பெங்களூரு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Shiva Murugesan | Last Updated : Feb 17, 2022, 01:32 PM IST
பிற மாநில பேருந்து கட்டணத்தை காட்டிலும் தமிழக பேருந்துகளில் கட்டணம் குறைவு title=

சென்னை: இந்தியாவில் முக்கிய நகரங்களான டில்லி, மும்பை, சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, பெங்களூரு மட்டுமின்றி மாநில தலைநகரங்களில் பெருநகர போக்குவரத்து கழகங்கள் அமைக்கப்பட்டு அந்தந்த மாநிலங்கள் செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் பெங்களூரு பஸ் பிரயாணிகர வேதிகே (Bengaluru Bus Prayanikara Vedike) என்ற அமைப்பு ஒரு ஆய்வு நடத்தி ஆய்வில் இந்திய பெருநகர போக்குவரத்து பேருந்துகளில் தமிழ்நாடு மற்றும் மும்பையில் குறைந்த கட்டணம் என்றும், கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் மெட்ரோபாலிட்டன் போக்குவரத்து கழகம் கீழ் இயங்கும் பெங்களூரு நகர பஸ்களின் கட்டணம் என்பது இந்தியாவின் பிற முக்கிய நகரங்களில் இயங்கும் நகர பேருந்துகளின் கட்டணத்தை காட்டிலும் மிக அதிகமாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.

அதேபோல குறைந்த கட்டண விகிதத்தில் சென்னை மற்றும் மும்பையும் இந்த இரு நகரப்பேருந்து கட்டணங்களை காட்டிலும் தலைநகர் டெல்லி உட்பட மற்ற பெருநகர பேருந்து கட்டணம் மிக அதிகமாக உள்ளதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அதன்படி சென்னை நகர பேருந்துகளில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.6-ம், 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.9-ம், 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.14-ம் தான் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் மும்பையில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.5-ம், 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.10-ம், 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.15-ம் கட்டணமும், தலைநகர் டெல்லியில் 5 மற்றும் 10 கிலோ மீட்டர் தூரங்களுக்கு ரூ.10 தான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.15 கட்டணமும், புனேயில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.10-ம், 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.15-ம், 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.20-ம் கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: பெண்கள் இலவச பேருந்து பயணம்; அரசு முக்கிய அறிவிப்பு வெளியீடு

மேலும் பஸ் பிரயாணிகர வேதிகே என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் மேற்கண்ட விபரங்கள் தெரிவந்த போதும் முக்கியமாக கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் மெட்ரோபாலிட்டன் போக்குவரத்து கழகம் கீழ் இயங்கும் நகர பேருந்துகள் இந்தியாவின் பிற முக்கிய நகரங்களில் இயங்கும் நகர பேருந்துகளின் கட்டணத்தை காட்டிலும் பெங்களூரு நகர பேருந்துகளின் கட்டணம் அதிகமாக இருப்பது தெரியவந்து உள்ளது.

அதன்படி மெட்ரோபாலிட்டன் போக்குவரத்து கழகம் கீழ் இயங்கும் பி.எம்.டி.சி. நகர பேருந்துகள் 5 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க பயணிகளிடம் இருந்து ரூ.15-ம், 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.20-ம், 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.25-ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

பெங்களூருவில் பி.எம்.டி.சி. பஸ்களில் கட்டணம் அதிகமாக இருப்பது பற்றி பெண்கள் கூறும்போது பஸ் பயணத்திற்காக மாதந்தோறும் ரூ.1,050 வரை செலவு செய்வதாகவும்  தங்களது குழந்தைகள் கல்வி செலவு, பால், உணவுக்காகவும் அதிக செலவு ஆகிறது. இப்படி செலவு ஆகும் போது பெங்களூருவில் நகர பேருந்து கட்டணத்தை குறைந்தால் நன்றாக இருக்கும் எனவும் இல்லாவிட்டால் தமிழ்நாட்டை போல பெண்களுக்கு நகர பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க: அரசுப் பேருந்துகளில் பிறந்த 2 குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் இலவசம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News