தஞ்சையில் பெண் மருத்துவரை பலிவாங்கிய கொரோனா

 கொரோனா களத்தில் முன்னணியில் இருக்கும் மருத்துவர்கள், அவ்வப்போது தொற்றுக்கு ஆளாகி உயிரை இழக்க நேரிடுகிறது. அப்படிப்பட்ட ஒரு துயர சம்பவம் தமிழகத்தின் தஞ்சாவூரில் (Tanjore) நடந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 7, 2020, 05:24 PM IST
  • சமீபத்தில்தான், செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சுகுமார் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.
  • உயிரிழந்த பெண் மருத்துவர் கும்பகோணத்தைச் சேர்ந்தவர்.
தஞ்சையில் பெண் மருத்துவரை பலிவாங்கிய கொரோனா title=

மருத்துவர்கள் கடவுள்களுக்கு சமமானவர்கள். அதிலும், இந்த கொரோனா காலத்தில், அவர்களது தன்னலமற்ற சேவையால்தான் இந்த உலகம் இந்த பெருந்தொற்றை சமாளித்து வருகிறது. ஆனால், போர்க்களத்தில் முன்னணியில் இருக்கும் போர் வீர்ரகளைப் போல, கொரோனா களத்தில் முன்னணியில் இருக்கும் மருத்துவர்கள், அவ்வப்போது தொற்றுக்கு ஆளாகி உயிரை இழக்க நேரிடுகிறது. அப்படிப்பட்ட ஒரு துயர சம்பவம் தமிழகத்தின் தஞ்சாவூரில் (Tanjore) நடந்துள்ளது.

இங்கு, பெண் மருத்துவர் (Woman doctor) ஒருவர் கொரோனா (Corona) தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார்.

சமீபத்தில்தான், செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சுகுமார் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் ஒட்டுமொத்த மருத்துவ சமூகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. இந்நிலையில், தஞ்சையில் மீண்டும் ஒரு மருத்துவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்திருப்பது அனைவரையும் சோகத்திலும் பீதியிலும் ஆழ்த்தியுள்ளது.

உயிரிழந்த பெண் மருத்துவர் கும்பகோணத்தைச் சேர்ந்தவர். 75 வயது மகப்பேறு மருத்துவரான இவர், கொரோனா தொற்று பாதிப்பினால் தஞ்சையில் ஒரு தனியார் மருத்துவமனையில் (Private Hospital) சிகிச்சைப் பெற்று வந்தார். எனினும், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிர் பிறந்தது.

கொரோனா தொற்றுக்கும் பொது மக்களுக்கும் இடையில் கேடயங்களாக நின்று போராடும் மருத்துவர்கள், பணிக்கிடையில் பாதிக்கப்பட்டு உயிர் இழப்பது அனைவரது இதயங்களையும் பாதித்துள்ளது.

தமிழகத்தில் (Tamil Nadu) கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. பலவித கட்டுப்பாடுகளையும் மீறி ஒவ்வொரு நாளும் பலர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.முன்னர் சென்னையை மட்டும் தன் பிடியில் வைத்திருந்த இந்தத் தொற்று இப்போது பிற மாவட்டங்களிலும் சீராக பரவி வருகிறது.  

Trending News