ராமநாதபுரம்: திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி காதலித்து விட்டு ஆசிரியர் ஏமாற்றியதால் பெண் இன்ஜினியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. காதல் தோல்வி காரணமாக அதிகளவில் தற்கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. காதலர்கள் உறுதியாக இருந்தால் பெற்றோர்கள் பிரித்து விடுகிறார்கள் இல்லையென்றால் காதலர்களின் ஒருவர் உண்மையாக இல்லாமல் அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டு விடுகிறது. அதோடு தொடர்ந்து பல்வேறு புகார்களில் ஆசிரியர்கள் சிக்கி வருவதும் தொடர்கதையான ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில் ஆசிரியர் காதலித்து ஏமாற்றியதால் பெண் இன்ஜினியர் தற்கொலை செய்து இருக்கிறார்.
ALSO READ | மனைவி ஊராட்சி மன்ற தலைவர், கணவர் வெளியூர் திருடன்!
ராமநாதபுரம் ஓம்சக்தி நகரின் 11-வது தெருவில் வசித்து வருபவர் முனியசாமி, இவருக்கு 25 வயதில் சவுமியா என்கிற மகள் இருக்கிறார். பொறியியல் பட்டதாரியான இவர் அரசு போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வருகிறார். இவருக்கு அதே ராமநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் ஷேக் முஹம்மது அபு(27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்களுக்குள் ஏற்பட்ட அந்த நட்புறவு நாளடைவில் காதலாக மாறி இருவரும் தங்களது செல்போன் நம்பர்களை பகிர்ந்துகொண்டு விடிய விடிய தங்களது காதலை வளர்த்து கொண்டு வந்தனர். மேலும் ஷேக், சவுமியாவை திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து இவர்களுக்குள்ள அதிக நெருக்கம் ஏற்பட்டு ஷேக் அடிக்கடி சவுமியாவின் வீட்டிற்கு வர ஆரம்பித்தார்.
இதனையடுத்து சவுமியா, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஷேக்கிடம் கூற அதற்கு ஷேக்கின் வீட்டில் சம்மதம் தெரிவித்து உள்ளனர். ஆனால் சிறிது நாட்கள் கழித்து சவுமியா அழகாக இல்லை, வரதட்சணை அதிகம் கொடுத்தால் தான் தனது மகனுக்கு சவுமியாவை திருமணம் செய்து வைப்போம் என்று கூறி திருமணத்திற்கு மறுத்துவிட்டனர். ஷேக்கும், சவுமியாவை திருமணம் செய்துகொள்ள மறுப்பு தெரிவித்து விட்டார். இதனால் மனமுடைந்து போன சவுமியா வீட்டில் யாரும் இல்லாத நேரமாக பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட பெற்றோர்கள் அதிர்ந்து போயினர். இதுகுறித்து சவுமியாவின் தந்தை முனியசாமி போலீசுக்கு புகாரளித்தார். கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தனர்.
அதன்பின்னர் சவுமியா எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது, அதில் "என் தற்கொலைக்கு முதல் காரணம் ஷேக் மற்றும் அவரது குடும்பத்தினர் தான், அடுத்ததாக திருப்பூர் மாமா" என்று எழுதியிருந்தார். இதனை அடிப்படையாக வைத்து தலைமறைவான ஷேக் மற்றும் சவுமியா தற்கொலைக்கு காரணமாக இருந்தவர்களையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
ALSO READ | மதுபோதையில் இருந்த மணமகனை மணக்க மறுத்த மணமகள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR