அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க உத்தரவு!

கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்க உத்தரவு!  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 8, 2018, 10:54 AM IST
அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க உத்தரவு!  title=

10:47 | 08-08-2018

கருணாநிதியின் உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்ககோரி உச்சநீதிமன்றம் உத்தரவு! 


10:38 | 08-08-2018

மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்கக் கோரிய வழக்கில் சற்று நேரத்தில் உத்தரவு. நீதிபதி ஹூலுவாடி ரமேஷ் உத்தரவை வாசித்து வருகிறார்!

நள்ளிரவில் நடத்தியதாக சொல்கிறார்கள்; ஆனால் உச்சநீதிமன்றத்திலேயே நடந்துள்ளது அவருக்கு தெரியாதா? உச்ச நீதிமன்றத்தில் இருந்து வந்த மூத்த வழக்கறிஞர், நள்ளிரவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உத்தரவு பிறப்பிக்க கூடாது என்பது சரியல்ல- திமுக தரப்பு


அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என கோருவதற்கு யாருக்கும் உரிமையில்லை என தமிழக அரசு தரப்பில் வாதம்! 

வயது முதிர்வு மற்றும் உடல் நிலை சோர்வு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த 11 நாட்களாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணி அளவில் காலமானார். இதையடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலபடுத்தபட்டது. 

திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி இன்று அரசு விடுமுறை என்றும், அடுத்த 7 நாட்களுக்கு அதாவது ஒருவாரம் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் உள்ள அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய வேண்டும் என திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அங்கு இடம் ஒதுக்க முடியாது எனவும், பல சட்ட சிக்கல்கள் உள்ளது. காமராஜ் நினைவகம் அருகே 2 ஏக்கர் நிலம ஒதுக்கப்டும் என தமிழக அரசு தெரிவித்தது.

கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்குவது தொடர்பான வழக்கில் தி.மு.க-வும் தமிழக அரசு சார்பிலும் வாக்குவாதம் நடந்து வருகிறது. அதில், உங்கள் பதிலில் சட்டசிக்கல், வழக்கு நிலுவையில் உள்ளது என்றீர்கள். ஆனால் இப்போது வழக்கு நிலுவையில் இல்லையே?. சட்ட சிக்கல் இருப்பதாக சொல்லிவிட்டு அதற்கு முரணாக வாதிடுகிறீர்களே என அரசுத் தரப்பிடம் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் கேள்வி எழுப்பினார். 

மேலும், அரசு பாகுபாடு காட்டுகிறது என்ற புகாருக்கு முகாந்திரமில்லை. மெரினாவில் இடமளிக்க மறுப்பது சட்டப்பிரிவு 14 ஐ எப்படி மீறுவதாகும். அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என கோருவதற்கு யாருக்கும் உரிமையில்லை எனவும் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலத்தில் அடக்கம் செய்வது மரியாதைக்குரியது இல்லையா? என அரசுத்தரப்பில் கூறப்பட்டது. 

காமராஜரை காங்கிரஸ் அலுவலகத்தில் தான் அடக்கம் செய்ய முடிவெடுத்தார்கள் என திமுக சார்பில் வாதம் எழுந்தது. இதற்கு, திமுக தலைவர் கருணாநிதியை காந்திமண்டபம் பகுதியில் அடக்கம் செய்வது வேண்டாம் என்பதன் மூலம் காந்தி, காமராஜர், பக்தவசலம் போன்றோரை அவமதிப்பதற்கு சமம் எனவும், ஜானகி இறந்த போது எம்.ஜி.ஆர். சமாதி அருகில் இடமளிக்க முடியாது என கருணாநிதி எழுதிய உத்தரவு உள்ளது என நகலை தாக்கல் செய்தார் அரசு தரப்பு வழக்கறிஞர் வாதம் செய்தனர்.  

இதற்கு, திமுக சார்பில் அண்ணா சமாதி வளாகத்தில் உடலை அடக்கம் செய்ய மட்டுமே அனுமதி கோருகிறோம். மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை ஒதுக்க மத்திய அரசின் அனுமதி தேவையில்லை எனவும் காந்தி மண்டபம் அருகே திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வதை மரியாதைக்குரியதாக கருத முடியாது; 
சட்டத்திற்கு உட்படாத காரணங்களைக் கூறி தமிழக அரசு அனுமதி மறுக்கிறது. எனது வாழ்வும், ஆன்மாவும் கருணாநிதிதான் என அண்ணாவே கூறியிருக்கிறார். மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்காவிடில் மக்களின் மனம் புண்படும் என வாதிட்டது.

இன்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? என அரசு தரப்பிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அரசுக்கு எந்த அவசரமும் இல்லை என நீதிபதிகளிடம் அரசு தரப்பு வழக்கறிஞர் வைத்திரநாதன் பதில் கூறினார். 

இந்நிலையில், மெரினாவில் தலைவர்களுக்கு நினைவிடம் கட்டுவதற்கு எதிரான 5 மனுக்களையும் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். இதையடுத்து, ஜெ., நினைவிடத்திற்கு எதிராக வேறு வழக்குகள் உள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

ஜானகியம்மாள் இறந்தபோது எம்.ஜி.ஆர். சமாதி அருகில் இடமளிக்க முடியாது என கருணாநிதி சொந்த கையெழுத்தில் எழுதிய உத்தரவு உள்ளது. திமுக தலைவர் கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்துவிட்டால் பிறகு நினைவிடம் கட்ட வேண்டுமென சொல்வார்கள் என அரசுதரப்பு கூறியது. இந்த நகலில் யாரும் ஜானகியம்மாளுக்கு இடமளிக்க வேண்டும் என முறையாக கோரியதாக இல்லையே என நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் தெரிவித்தார். 

அரசு தரப்பில், முதல்வர், முன்னாள் முதல்வர்களை அவர்களுக்கு வழங்கப்படும் புரோட்டோகால் அடிப்படையிலேயே வேறுபடுத்தப்பட்டுள்ளனர் என வாதிட்டபோது; முதல்வர்களை மெரினாவில் புதைக்கலாம் என புரோட்டோகால் சொல்லவில்லையே என நீதிபதி எஸ்.எஸ். சுந்தர் கூறினார். 

செய்திக்குறிப்பு என்பது அரசாணை கிடையாது; அதை எதிர்த்து முறையீடு செய்ய முடியாது என அரசு தரப்பில் வாதம். 

இதையடுத்து, நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் கூறுகையில், நீங்கள் எதை வெளியிட்டீர்களோ அதைத்தான் எதிர்த்து வழக்கு தொடர்கிறார்கள்; அதில் தவறென்ன உள்ளது? என தெரிவித்தார். 

மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி கோரும் மனு மீது உடனடியாக  தீர்ப்பளிக்க கூடாது என தெரிவித்துள்ளது! 

 

Trending News