கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் உயிர் துறந்த சம்பவம் நெகிழ்வையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கௌதம்பேட்டை பகுதியில் சேகர் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு வயது 65. இவரது மனைவி அஞ்சலிக்கு வயது 60. இவர்களுக்கு இரண்டு ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒன்றாக வசித்து வந்தனர்.
இதனிடையே கடந்த சில நாட்களாக சேகருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. சிகிச்சையில் இருந்த அவர் நேற்று உயிரிழந்தார். அவர் உயிரிழந்த செய்தி அவரது குடும்பத்தை வெகுவாக பாதித்தது. குறிப்பாக அவரது மனைவி அஞ்சலி அவரது உடலுக்கு அருகே அமர்ந்து அழுதபடி இருந்துள்ளளார்.
மேலும் படிக்க | மதுபோதையால் விபத்து - அரசு பேருந்தின் மீது மோதிய ஷேர் ஆட்டோ... சிகிச்சையில் ஓட்டுநர்
இதனிடையே இன்று காலை சேகரின் மனைவிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கணவர் சேகரின் உடலுக்கு அருகே மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை அடுத்து அஞ்சலியின் உடலும் அவரது கணவர் சேகரின் உடலுக்கு அருகில் வைக்கப்பட்டது.
மேலும் கணவன் உயிரிழந்த துக்கம் தாங்காமல் மனைவி உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கணவன் மற்றும் மனைவி ஆகியோரின் உடல்கள் அலங்கரிக்கப்பட்ட ஒரே பல்லக்கில் வைத்து இறுதி ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்வையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கணவன் மனைவி இடையேயான உறவு அனைத்து உறவுகளிலும் மிக முக்கியமான உறவாக கருதப்படுகின்றது. திருமணம் என்னும் அருமையான பந்தத்தில் இணையும் இவர்கள் உயிர் போகும் வரை நண்பர்களாக ஒருவருக்கு ஒருவர் துணை இருக்கிறார்கள். அப்படிப்பட்ட நிலையில், அதில் ஒருவர் இறந்தால், மற்ற ஒருவரால் அந்த பிரிவை தாங்கிக்கொள்வது சாத்தியமற்ற ஒன்றாகிவிடுகிறது. மிக அரிதாக, துணையை பிரிந்த சிலருக்கு மனதுடன் உயிரும் முடங்கிப்போகிறது. அப்படிப்பட்ட ஒரு அரிய சம்பவம்தான் இந்த சம்பவமும்!!
மேலும் படிக்க | சென்னையில் 537 லாட்ஜ், மேன்ஷன்களில் காவல்துறை அதிரடி சிறப்பு சோதனை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ