கணவனை கொலை செய்த மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

Hosur | ஓசூர் அருகே கணவனை கொலை செய்த மனைவி, கள்ளக்காதலன் உள்ளிட்ட மூன்று பேருக்கு ஓசூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 6, 2024, 12:03 PM IST
  • ஓசூர் கணவன் கொலை வழக்கு
  • மனைவிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
  • ஓசூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
கணவனை கொலை செய்த மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு title=

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பேரிகை அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாபு (38)இவர் விவசாயி. இவரது மனைவி சுதா இவருக்கும் பேரிகை அருகே பி.சிங்கிரிப்பள்ளியை சேர்ந்த வெங்கடாஜலபதி, என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளதாக கூறப்படுகிறது, இது குறித்து அறிந்த பாபு, மனைவி சுதாவையும், வெங்கடாஜலபதியையும் கண்டித்துள்ளார். ஆனாலும் அவர்கள், கள்ளக்காதலை தொடர்ந்து உள்ளனர். இதனால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் தன் கணவன் உயிரோடு இருக்கும் வரை நாம் சந்தோஷமாக இருக்க முடியாது என வெங்கடாஜலபதியிடம், சுதா கூறியுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, வெங்கடாஜலபதி, தன் நண்பர்களான பேரிகை மாருதிநகரை சேர்ந்த ஆஞ்சப்பா, முனியப்பன், எஸ்.குருபரப்பள்ளியை சேர்ந்த சீனிவாசன் ஆகியோருடன் சேர்ந்து பாபுவை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார். இவர்கள் நால்வரும், சுதாவின் உதவியோடு கடந்த 2013 ஜூன் 13ம் தேதி அதிகாலை 3 மணியளவில், வீட்டில் தூங்கி கொண்டிருந்த பாபுவின் முகத்தில் தலையணை வைத்து அழுத்தியும், கழுத்தில் துண்டால் இருக்கியும் கொன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. 

மேலும் படிக்க | டாஸ்மாக் தொடர்பாக புதிய திட்டம்! இனி அரசே 10 ரூபாய் கொடுக்கும்!

ஆனால், பாபு மாரடைப்பால் இறந்துவிட்டார் என ஓசூரில் வசிக்கும் அவரது தம்பி மஞ்சுநாத்திற்கு சுதா தகவல் அளித்துள்ளார். தகவலறிந்து வந்த மஞ்சுநாத் பாபுவின் கழுத்தில் காயங்கள் இருப்பதை பார்த்து சந்தேகமடைந்து பேரிகை போலீசில் புகாரளித்தார். அதன்படி பாபுவை கொன்ற அவரது மனைவி சுதா, கள்ளக்காதலன் வெங்கடாஜலபதி அவரின் கூட்டாளிகள் மூவர் என, ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

இவ்வழக்கு ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 11 ஆண்டுகளாக நடந்து வந்தது. வழக்கு நடக்கும் போதே குற்றம்சாட்டப்பவர்களில் ஆஞ்சப்பா, சீனிவாசன் ஆகியோர் இறந்துவிட்டனர். இந்த நிலையில் நீதிபதி சந்தோஷ் குற்றம்சாட்டப்பட்ட சுதா (41) கள்ளக்காதலன் வெங்கடாஜலபதி (45) மற்றும் முனியப்பன் (45) ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனை ரூ1 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். 

அபராத தொகையை கட்டாதபட்சத்தில் கூடுதலாக ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் சின்னபில்லப்பா என்பவர் ஆஜரானார். இதை அடுத்து கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட மனைவி, கள்ளக்காதலன் உள்ளிட்ட மூன்று பேரையும் சேலம் மத்திய சிறையில் காவல்துறையினர் அடைத்தனர். 

மேலும் படிக்க | இந்த பகுதிகளில் விரைவில் தடுப்பணைகள் கட்டப்படும்! அமைச்சர் துரைமுருகன் உறுதி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News