Udhayanidhi Stalin : விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகஸ்ட் 19 ஆம் தேதி துணை முதலமைச்சர் பொறுப்பை ஏற்க இருப்பதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் தமிழ் புதல்வன் திட்டம் தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், பேச்சுவாக்கில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என சொல்லிவிட்டு, ஆகஸ்ட் 19 ஆம் தேதிக்கு பிறகு தான் அப்படி கூப்பிட வேண்டும், சாரி... சாரி.. நான் இப்போவே சொல்லிட்டேன் என கூறினார். இதன்மூலம் துணை முதலமைச்சர் பொறுப்பை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்பது உறுதியாகியுள்ளது. அதற்காக ஆகஸ்ட் 19 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டது ஏன்?, அந்த நாளின் சிறப்பு என்ன? என்பது எல்லோருக்கும் இருக்கும் கேள்வி.
ஆகஸ்ட் 19 ஆம் தேதி சிறப்பு என்ன?
இந்த ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் தேதி திங்கட்கிழமை வருகிறது. அன்றைய நாள் ஆவணி அவிட்டம், பௌர்ணமி நாள். கடவுள் நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் தெரியும் இது ஒரு மிகச்சிறப்பான நாள். ஏனென்றால் ஆவணி அவிட்டத்துக்கு என்று ஒரு சிறப்பும், பௌர்ணமிக்கு என்று ஒரு சிறப்பும், திங்கட்கிழமை என்பதால் அந்தநாளுக்கு ஒரு சிறப்பும் என பல சிறப்புகளை கொண்ட நாளாக இது இருக்கிறது. அதனால் தான் ஆகஸ்ட் 19 ஆம் தேதி உதயநிதி ஸ்டாலினுக்கு புரமோஷன் கொடுக்க திமுக முடிவெடுத்திருக்கிறது.
ஆவணி அவிட்டம், பௌர்ணமி சிறப்புகள்
ஆவணி அவிட்ட நாளில் நான் விஷ்ணு பகவான் ஹயக்ரீவர் அவதாரம் எடுத்து அசுரர்கள் திருடிச் சென்ற வேதங்களை மீட்டு கொண்டு வந்த நாளாகும். இந்த நாளில் கையில் எடுக்கும் எந்த பொறுப்பும் வெற்றியை கொடுக்கும் என்பது நம்பிக்கை. அதேபோல், பௌர்ணமி நாளில் கடவுள் முழு சக்தியுடன் இருக்கும் நாளாக பார்க்கப்படுகிறது. அந்த நாளில் கடவுளிடம் வேண்டுவது கிடைக்கும் என்பது மட்டுமல்லாமல் எடுக்கும் காரியங்களிலும் வெற்றி கிட்டும் என்பதும் நம்பிக்கை. திங்கட்கிழமை என்பது அதிகாரத்தின் நாளாகவும் பார்க்கப்படுகிறது.
எனவே, இந்த நாளில் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றால் தன்னுடைய அரசியல் பயணத்தில் வெற்றிகளையும், எல்லா தடைகளையும் திறம்பட எதிர்கொள்வார் என குடும்பத்தினர் பெரும் நம்பிக்கை கொண்டுள்ளனர். குறிப்பாக, கடவுள் நம்பிக்கை கொண்டிருக்கும் துர்கா ஸ்டாலின், தன்னுடைய மகன் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராவதையொட்டி பல ஜோசியர்களிடம் ஆலோசனை நடத்திய பிறகே தேதியை தேர்வு செய்து இருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ