வேலூரில் மீண்டும் உதிக்குமா உதயசூரியன்? கருத்துக் கணிப்பில் மாஸ் காட்டிய கதிர் ஆனந்த்! விவரம் என்ன?

மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்வதால் அரசியல் கட்சிகள் இறுதி கட்ட பிரச்சாரத்தை தீவிர படுத்தியுள்ளன.

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Yuvashree | Last Updated : Apr 17, 2024, 12:16 PM IST
  • வேலூரில் ஜெயிக்கப்போவது யார்?
  • மீண்டும் உதிக்குமா உதயசூரியன்?
  • கருத்துக்கணிப்பு இதுதான்!
வேலூரில் மீண்டும் உதிக்குமா உதயசூரியன்? கருத்துக் கணிப்பில் மாஸ் காட்டிய கதிர் ஆனந்த்! விவரம் என்ன? title=

மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்வதால் அரசியல் கட்சிகள் இறுதி கட்ட பிரச்சாரத்தை தீவிர படுத்தியுள்ளன. நாளை மறுநாள் தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழகத்தில் உச்சகட்ட பரபரப்பில் அரசியல் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த முறை திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் இடையே போட்டி நிலவுகிறது. நாம் தமிழர் கட்சி வழக்கம் போல தனித்து களம் காண்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் , முஸ்லிம் லீக் கட்சிகள் உள்ளன.  அதிமுக கூட்டணியை பொறுத்தவரை தேமுதிக மற்றும் ஒரு சில சிறு கட்சிகளே கூட்டணியில் உள்ளன. 

பாஜக கூட்டணியில் பாமக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதி கட்சி உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. அதோடு ஓபிஎஸ் முழு ஆதரவையும் பாஜகவுக்கு கொடுத்துள்ளார்.  இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் ஓயும் நிலையில் பல்வேறு கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. 

அதன்படி வேலூர் தொகுதியில் யார் இந்த ரேஸில் முன்னணியில் உள்ளார் என்பதும் வெளியாகி உள்ளது. கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற கதிர் ஆனந்த் திமுக சார்பில் இந்த முறையும் போட்டியிடுகிறார். அதேபோல கடந்த முறை இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்த ஏசி சண்முகம் இந்த முறை தாமரை சின்னத்தில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் பசுபதியும் நாம் தமிழர் கட்சி சார்பில் மகேஷ் குமார் என்பவரும் போட்டியிடுகின்றனர். இதில் அதிமுக வேட்பாளர் பெரிய பரிச்சயம் இல்லாதவர் என்பதால் அவருக்கான வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாக தான் உள்ளது.

மேலும் படிக்க | ஜிகே மணியிடம் பதவியை பிடுங்கியவர் அன்புமணி - எடப்பாடி பழனிசாமி வீசிய புதுகுண்டு

ஆனால் திமுக பாஜகவுக்கு இடையே நல்ல போட்டி நிலவி வருகிறது. கடந்த முறை வெற்றி பெற்ற கதிர் ஆனந்த் தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை முறையாக செய்துள்ளதாக மக்கள் கூறுவதாக திமுக வாக்கு சேகரித்து வருகிறது. அதோடு மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை சொல்லியும் திமுகவினர் வாக்கு சேகரித்து வருகின்றனர். மகளிர் உரிமைத் தொகை, பெண்களுக்கு இலவச பேருந்து  பயணம் என திமுகவின் சாதனைகளை எடுத்துச் சொல்கின்றனர்.   அதேநேரம் பாஜக சார்பில் போட்டியிடும் ஏசி சண்முகமோ மத்திய அரசின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

 எது எப்படியோ கருத்து கணிப்பு முடிவின் படி வேலூர் தொகுதியை மீண்டும் கதிர் ஆனந்தன் கைப்பற்றுவார் என்று கூறுகின்றனர். கதிர் ஆனந்தின் வெற்றி வாய்ப்பு அங்கு பிரகாசமாக இருக்கும் நிலையில் மக்கள் என்ன நினைக்கிறார்கள்? மக்களின் வாக்கு யாருக்கு? கதிரானந்தை மீண்டும் மகுடம் சூட வைப்பார்களா? என்பதெல்லாம் ஜூன் நான்காம் தேதி தான் தெரியும்.

மேலும் படிக்க | TASMAC Leave : நாடாளுமன்ற தேர்தலால் டாஸ்மாக் லீவ்! மது கடைகளில் நிரம்பி வழிந்த கூட்டம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News