புது டெல்லி: மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து நேற்று வந்த திடீர் அழைப்பு வந்ததை அடுத்து உடனே டில்லி புறப்பட்டு சென்றார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித். இன்று மதியம் குடியரசுத் தலைவரை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் குடியரசு தலைவர் மாளிகையில் சந்தித்தார். மாலை பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசுகிறார். முன்னதாக டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து பேசினார்.
சமீபத்தில் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த சிலருக்கு மாநில கவர்னர் பொறுப்பு வழங்கப்படும் என்று பேச்சு அடிப்படுகிறது. அதில் சட்டத்துறை அமைச்சராக இருந்த ரவிசங்கர் பிரசாத்திற்கு (Ravishankar Prasad) தமிழக ஆளுநர் பொறுப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகனுக்கு இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அடுத்த 10 மணி நேரத்தில் காலியாக இருந்த தமிழ்நாடு பாஜக தலைவர் பதவிக்கு அண்மையில் பாஜகவில் இணைந்த முன்னால் IPS அண்ணாமலையை நியமித்து பாஜக மேலிடம் உத்தரவிட்டது.
தற்போது தமிழ்நாடு ஆளுநர் பதவிக்கும் புதிதாக ஒருவர் நியமிக்கப்படுவார் எனத் தெரிகிறது. இந்த சம்பவங்களை வைத்து பார்க்கும் போது பாஜக தமிழ்நாட்டில் தனது ஆட்டத்தை துவங்கிவிட்டது என்பதற்கான சமிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
ALSO READ | மத்திய அமைச்சர் பதவியும் - அந்த 4 இடங்களும்; எல். முருகன் கடந்து வந்த பாதை!
முந்தைய அதிமுக ஆட்சியில் அதனுடன் கூட்டணி கட்சியாக இருந்தால், பாஜக-வால் எதிர்த்து சரியாக அரசியல் செய்ய முடியவில்லை. ஆனால் தற்போது திமுக ஆட்சி நடைபெற்று வருவதால், திமுக ஆட்சிக்கு எதிரான அரசியலை கையில் எடுக்கும் முனைப்பில் பாஜகவின் அடுத்தடுத்து நடவடிக்கைகள் இருக்கிறது.
தமிழ்நாட்டின் எதிர்கட்சியாக அதிமுக இருந்தாலும், அக்கட்சியின் உள்விவகாரம் காரணமாக அதன் தலைவர்கள் திமுக-வை எதிர்த்து சரியாக அரசியல் செய்ய முடியாமல் இருக்கிறார்கள். ஆனால் அதன் கூட்டணி கட்சியில் அங்கம் வகிக்கும் பாஜக, "ஒன்றிய அரசு, ஜெய்ஹிந்த், நீட் தேர்வு" போன்ற விவகாரத்தில் தங்களை முன்னிறுத்தி வருகிறது.
பாஜகவின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் பார்க்கும் போது தமிழ்நாட்டில் தங்களை ஒரு எதிர்கட்சியாக காட்டிக்கொள்ள முயல்கிறது என்பதற்கான சமிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
அமைச்சர் பதவி, புதிய பாஜக தலைவர், புதிய ஆளுநர் (இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை) என பாஜகவின் அதிரடிகளை பார்க்கும் போது தமிழ்நாட்டில் பாஜக தனது ஆட்டத்தை துவங்கிவிட்டது என அரசியல் ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.
ALSO READ | பிரதமரின் பேரன்பை ஒவ்வொரு வீட்டிற்கும் எடுத்துச் செல்வோம்: பாஜக தலைவர் அண்ணாமலை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR