அரிசி உற்பத்திக்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் -ஸ்டாலின்!

அரிசி உற்பத்தி குறித்து தமிழக அரசு அளித்துள்ள புள்ளி விவரங்கள் உண்மைக்கு புறம்பாக இருப்பதால், உற்பத்திக்கான வெள்ளை அறிக்கை வேண்டும் -ஸ்டாலின்!!

Last Updated : Jun 21, 2018, 06:23 PM IST
அரிசி உற்பத்திக்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் -ஸ்டாலின்! title=

அரிசி உற்பத்தி குறித்து தமிழக அரசு அளித்துள்ள புள்ளி விவரங்கள் உண்மைக்கு புறம்பாக இருப்பதால், உற்பத்திக்கான வெள்ளை அறிக்கை வேண்டும் -ஸ்டாலின்!!

அரிசி உற்பத்தி குறித்து தமிழக அரசு அளித்துள்ள புள்ளி விவரங்கள் உண்மைக்கு புறம்பாக இருப்பதால், அரிசி உற்பத்திக்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் குரிபிட்டுள்ளதாவது....! 

அரிசி உற்பத்தி குறித்து மாநில அரசு தந்துள்ள புள்ளி விவரத்திற்கும், "ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா" வெளியிட்டுள்ள புள்ளி விவரத்திற்கும் இடையிலான வேறுபாடு பெருமளவு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், 2013-14 மற்றும் 2014-15 ஆம் ஆண்டுகளில் முறையே அரிசி உற்பத்தி 71.15 லட்சம் மற்றும் 79.49 லட்சம் டன்கள் என தமிழக அரசு புள்ளி விவரம் தந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதே போல், இந்த இரண்டு ஆண்டு காலத்திற்கான அரிசி உற்பத்தி குறித்து, ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள இந்திய மாநிலங்கள் குறித்த புள்ளி விவரங்கள் தொடர்பான கையேட்டில், 53.49 லட்சம் டன்கள் அரிசி தான் உற்பத்தி செய்யப்பட்டிருப்பதாக கூறியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் அடிப்படையில், ஏறத்தாழ 22 லட்சம் டன்கள் அளவுக்கு தமிழ்நாடு அரசின் புள்ளி விவரம் செயற்கையாக உயர்த்திக் காட்டப்பட்டிருப்பதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

மக்களை ஏமாற்ற நினைத்தால் சரியான நேரத்தில் அவர்கள் பாடம் புகட்டுவார்கள் என்று எச்சரித்த ஸ்டாலின், அரிசி உற்பத்தி தொடர்பான முழுமையான உண்மையான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

 

Trending News