Tamil Nadu rural local body elections : தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. வாக்குப்பெட்டிகளை தயார்படுத்துவது உள்ளிட்ட பணிகளை தொடங்குமாறு மாநில தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால் தேர்தல் நடைபெறுமா? எப்போது நடைபெறும்? உள்ளிட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு தமிழ்நாடு திரும்பியதும் தெரியவரும்.
உள்ளாட்சி தேர்தலில் இருக்கும் சிக்கல்
ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் மாநில தேர்தல் ஆணையத்துக்கு ஒரு சிக்கல் இருக்கிறது. ஏனென்றால் அதிமுக ஆட்சிக்காலத்தில் அதாவது 2019 ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. திமுக 2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும் எஞ்சிய ஒன்பது மாவட்டங்களில் வார்டு மறுவரையறை எல்லாம் முடித்து உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு நகர்புற உள்ளாட்சி தேர்தலை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நடத்தியது.
மேலும் படிக்க | தமிழ்நாட்டில் முதன்மையாக பெண்கள் நடத்திய யாகசாலை பூஜை
இப்போது 2019 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மட்டுமே பதவிக்காலம் முடிய இருக்கிறது. மற்ற 9 மாவட்டங்களைச் சேர்ந்த ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு இன்னும் மூன்று ஆண்டு பதவிக்காலம் இருக்கிறது. அவர்கள் இப்போது தேர்தல் வரக்கூடாது என விரும்புகிறார்கள். அப்படியே நடத்தினாலும் 2019 ஆம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்ட பகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தட்டும் என வலியுறுத்துகின்றனர். எஞ்சிய பகுதிகளுக்கும், நகர்புற உள்ளாட்சி தேர்தலையும் 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுக்குப் பிறகு நடத்த வேண்டும் என்றும் கட்சியினர் உள்ளிட்டோர் விரும்புகின்றனர்.
எப்போது தேர்தல் நடைபெறும்?
ஒருவேளை ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட இருந்தால் டிசம்பர் அல்லது ஜனவரி மாதங்களில் நடக்க அதிக வாய்ப்பு இருக்கின்றன. அதற்குரிய ஏற்பாடுகளை எல்லாம் மாநில தேர்தல் ஆணையம் செய்து கொண்டிருக்கிறது. ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுமா?, 2019 ஆம் ஆண்டு தேர்தல் நடத்திய மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுமா? என்பது குறித்து முதலமைச்சர் அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் கட்சி நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.
மேலும் படிக்க | கிசுகிசு : குடைச்சல் கொடுக்கும் கதர் புள்ளி - கடுப்பில் ஆளும் தரப்பு..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ