Weather updates in South India: விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினம் கடற்கரைகளில் பலவீனமான யுஏசி (UAC) உருவாகியுள்ளது, இது கேடிசி (KTCC Region) பிராந்தியத்தை நோக்கி வடமேற்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகும். இதனால் தெலுங்கானா, கடலோர ஆந்திரம், வட கடலோர தமிழ்நாட்டின் சில பகுதிகளில் கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதேபோல கே.டி.சி.சி பகுதியில் நல்ல மழையைப் பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் தெற்கு மாவட்டங்களான மதுரை, சிவகங்கா, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருவாரூர், சேலம், திருநெல்வேலியின் சில பகுதிகள் மாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் (Regional Meteorological Centre) அறிவித்துள்ளது.
ALSO READ | பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை மோசம், வாகனங்கள் சேதம் புகைப்படத் தொகுப்பு
சென்னை நிலவரம் (Chennai Weather)
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரங்களுக்கு வானமே பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை (Fishermen Warning)
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரையோர மீனவர்களுக்கு இன்று எந்தவித எச்சரிக்கையும் விடுக்கப்பட வில்லை.
ALSO READ | கொரோனாவுக்கு பிறகு வெள்ளத்தால் அழியும் சீனா
தெற்கு தமிழகத்தில் இருந்து தனுஷ்கோடி வரை இன்று இரவு 11.30 மணி வரை அலையின் (Wave Alert) உயரம் மணிக்கு 1.8 - 2.8 மீட்டர் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR