வானிலை முன்னறிவிப்பு! சூறைக்காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக, தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில், சூறைக்காற்றுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Last Updated : May 26, 2019, 10:08 AM IST
வானிலை முன்னறிவிப்பு! சூறைக்காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு title=

வெப்பச்சலனம் காரணமாக, தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில், சூறைக்காற்றுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் கத்திரி வெளியில் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. சென்னை, வேலூர், திருத்தணி உள்ளிட்ட 11 நகரங்களில் வெயிலின் அளவு 100 டிகிரி செல்சியஸை தாண்டு செல்கிறது.

இந்நிலையில் தென் தமிழக பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல், சூறை காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Trending News