தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 30, 2019, 09:46 AM IST
தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் title=

சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தென்மேற்கு பருவக் காற்று காரணமாகவும், ஒருசில மாவட்டங்களில் மழை பெய்யும் காற்றின் வேகமாறுபாடு மற்றும் வெப்பச்சலனம் காரணமாகவும் ஓரிரு இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக் கூடும். அதேபோல தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளன என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக 36 மற்றும் குறைந்தபட்சமகா  25 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும் எனவும் கூறப்பட்டு உள்ளது.

நேற்று அதிக அளவில் சேலம் மாவட்டத்தின் ஓமலூர் பகுதியில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

Trending News