தேமுதிக தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை: பிரேமலதா விஜயகாந்த்

DMDK PREMALATHA VIJAYAKANTH PRESS MEET: தேமுதிக தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை. இருந்தாலும், நாடாளுமன்ற தேர்தலில் தனித்தும் போட்டியிடாது என பிரேமலதா விஜயகாந்த் பேட்டியளித்திருக்கிறார் 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 9, 2023, 05:02 PM IST
  • பிரேமலதாவே தே.மு.தி.க. கட்சியை தொடர்ந்து வழி நடத்தி வருகிறார்.
  • விஜய பிரபாகரன் எந்த பொறுப்பும் இல்லாமல் கட்சியில் பணியாற்றி வருகிறார்.
தேமுதிக தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை: பிரேமலதா விஜயகாந்த்  title=

விருதுநகர் மாவட்டத்திற்கு நேற்று வருகை புரிந்த  தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சிவகாசியில் பொங்கல் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் நேற்று இரவு ராஜபாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பின் விருதுநகரிலேயே தங்கி இருந்தார்.பின்னர் இன்று காலை தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைய வேண்டி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அவரது பெயரில் சிறப்பு சாமி தரிசனம் செய்தார். பின்னர் சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த்  பேசும்போது,

தேமுதிக தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை இருப்பினும், தமிழகத்திற்கு யாரால் நன்மைக்கு கிடைக்கும் என்பதை ஆராய்ந்து தேமுதிக நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்கும். நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக கூட்டணியில் போட்டியிடும். 

மேலும் படிக்க | ஆளுநர் வெளிநடப்பு ; ஓடி வந்த அண்ணாமலை - என்னென்ன சொல்கிறார் பாருங்க!

தேர்தலுக்கு முன்பு ஒரு நிலைப்பாடு தேர்தலுக்கு பின்பு ஒரு நிலைப்பாடு என இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளது திராவிட மாடல் திமுக அரசு ஆகும். பொங்கல் தொகுப்பில் ஆயிரம் ரூபாய் அறிவித்துள்ளதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதிமுக ஆட்சியின் போது 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்திய முதல்வர், அதிமுக வழங்கிய 2 ஆயிரம் ரூபாயை வழங்கிட வேண்டும்.

அதேபோல் மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக, அதிகாரத்தை பயன்படுத்தி தமிழகத்தில் பெரிய சக்தியாக வளர முயற்சி செய்கிறது. இதனை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா என்பது தேர்தல் முடிவில் தெரியும். மத்திய மாநில அரசுகள் பட்டாசு தொழிலை பாதுகாக்கவில்லை என்றால். தேமுதிக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தும். எழுதாத பேனாவை வைத்து ரூ.80 கோடி செலவில் கலைஞர் நினைவகம் அமைப்பதை எந்த தமிழர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தெரிவித்து உள்ளார்.

இதனிடையே தற்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்கோளாறால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அவரது மனைவி பிரேமலதாவே கட்சியை தொடர்ந்து வழி நடத்தி வருகிறார். தற்போது பொருளாளராக பதவி வகித்து வரும் பிரேமலதாவுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பை வழங்க வேண்டும் என்று நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இதையொட்டி தே.மு.தி.க.வில் செயல் தலைவர் பதவி என்கிற புதிய பதவி உருவாக்கப்பட்டு அதில் பிரேமலதா நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | பழனி முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நிகழ்ச்சி நடத்த உண்ணாவிரதப் போராட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News