உதயநிதியுடன் நாம் அனைவரும் நிற்க வேண்டும்! முழு ஆதரவு அளித்த வெற்றிமாறன்!

எனக்கு இந்தியா என்ற பெயரை போதும்; அதுவே சரியானதாக உள்ளது. உதயநிதியுடன் நாம் அனைவரும் நிற்க வேண்டும்; நானும் அவருடன் நிற்கிறேன்; அவருக்கு ஆதரவு தருகிறேன் -  வெற்றிமாறன்  

Written by - RK Spark | Last Updated : Sep 7, 2023, 08:36 AM IST
  • எல்லோருக்கும் எல்லாமும் சமமாக கிடைக்க வேண்டும்.
  • உதயநிதியுடன் நாம் அனைவரும் நிற்க வேண்டும்.
  • நானும் அவருடன் நிற்கிறேன். நானும் அவருக்கு ஆதரவு தருகிறேன்.
உதயநிதியுடன் நாம் அனைவரும் நிற்க வேண்டும்! முழு ஆதரவு அளித்த வெற்றிமாறன்! title=

சென்னை வளசரவாக்கம் அன்பு நகர் பகுதியில் பியூர் சினிமா புத்தக விற்பனை நிலையத்தை இயக்குநர் வெற்றிமாறன் திறந்து வைத்து பார்வையிட்டார்.  தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில்,  புத்தக வாசிப்பு மிகவும் அவசியமானது. எந்த காலகட்டத்திலும் நம்மை மேம்படுத்திக் கொள்ளவும், பக்குவப்படுத்திக் கொள்ளவும், அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக் கொள்ளவும் வாசிப்பு மிக அவசியமானது. பிறக்கின்ற எல்லோருக்கும் எல்லாமும் சமமாக கிடைக்க வேண்டும் என்பது அடிப்படை. அது பிறப்புரிமை. அதை மறுக்கின்ற எதுவாக இருந்தாலும், எந்த ரூபத்தில் இருந்தாலும் அதை எதிர்ப்பதும், ஒடுக்குவதும், வீழ்த்துவதும் சுதந்திர மனிதர்களாகிய, விடுதலை விரும்பும் மனிதர்களாகிய நம்முடைய அனைவரது கடமை. அதைப் பற்றி பேசி இருக்கக்கூடிய உதயநிதியுடன் நாம் அனைவரும் நிற்க வேண்டும். நானும் அவருடன் நிற்கிறேன். நானும் அவருக்கு ஆதரவு தருகிறேன். இதை நான் இந்த இடத்தில் கூறுவதற்கான காரணம் என்னவென்றால், நமக்கு இதுவரை தவறாக கற்பிக்கப்பட்டுள்ள விடுதலையிலிருந்து, வாசிப்பில் இருந்து கிடைக்கும் என நம்புகிறேன்.

மேலும் படிக்க | ஆளுநரின் கையெழுத்துக்காக காத்திருக்கும் 49 சிறைவாசிகளின் விடுதலை

இந்தியா பெயர்மாற்றம் குறித்த கேள்விக்கு, எனக்கு இந்தியா என்ற பெயரை போதும். அதுவே சரியானதாக உள்ளது.  ஜெய் பீம், சார்பட்டா படங்களுக்கு தேசிய விருது குறித்த கேள்விக்கு, தேசிய விருது பற்றி எனக்கு வேறு ஒரு கருத்து உள்ளது. மற்றவர்கள் பேசுவதில் இருந்து எனக்கு வேறு விதமான கருத்து உள்ளது. நம்முடைய படத்தை ஒரு விதமான தேர்வுக்கு நாம் அனுப்புகிறோம் என்றால், அந்த தேர்வு குழுவின் முடிவுக்கு கட்டுப்படுகிறேன் என்ற ஒப்புதலுக்கு உட்பட்டு படத்தை அனுப்புகிறோம். அந்தப் படத்தை அனுப்பும் போதே, அதன் முடிவு என்னவாக இருந்தாலும் நாம் உடன்படுகிறோம் என்று கூறி தான் அனுப்புகிறோம். அந்தப் படத்துக்கு விருது கிடைக்கிறது, கிடைக்கவில்லை என்பது அந்த தேர்வு குழுவின் முடிவு. அந்த முடிவு படத்தின் தரத்தையோ, சமூகத்தின் மீதான பங்களிப்பையோ தீர்மானிப்பதில்லை.

ஜெய்பீம் படம் வந்த பிறகு அந்த குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எந்த மாதிரியான மாற்றங்கள் வந்திருக்கிறது என்பது இந்த படத்தின் தாக்கத்தை பொறுத்து உள்ளது.  ஒரு படத்தின் தரத்தை ஒரு குறிப்பிட்ட தேர்வு குழு தீர்மானிக்க முடியாது என்பதை என்னுடைய கருத்து.  ஒரு தேர்வு குழுவில் உள்ள ஒருவரின் விருப்பு வெறுப்பு, அந்த குழுவின் விருப்பு வெறுப்பாக  இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாட்டில் இருந்து ஜூரியாக சென்றுள்ளதால் தமிழ்நாட்டிற்கு நிறைய விருது கிடைக்க வேண்டும் என்பதும் கிடையாது. அந்தக் குழு என்ன தீர்மானிக்கிறதோ அதை பொறுத்து தான் அது. ஒரு குழு தேர்ந்தெடுக்காததாலேயே அந்த படம் சிறந்த படம் இல்லை என்று ஆகிவிடாது. உதயநிதி தலைக்கு 10 கோடி ரூபாய் என்று விலை நிர்ணயித்தது வன்முறையை தூண்டும் செயலாக உள்ளது என்ற கேள்விக்கு,  அது வன்முறையை தான் தூண்டுகிறது. 

விடுதலை இரண்டாம் பாகம் குறித்த கேள்விக்கு, விடுதலை இரண்டாம் பாகம் அடுத்த வருடம் ஆரம்பத்தில் வெளியாகி விடும். கிட்டத்தட்ட பணிகள் முடிந்து விட்டது என தெரிவித்தார். தொடர்ந்து சினிமா துறை மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,  வாசிப்பு இருந்ததால் தான் பாலுமகேந்திரா என்னை சேர்த்துக்கொண்டார்.  ஒவ்வொரு படத்திற்கும் 2, 3 ஆண்டுகள் ஆகிறது.. நான் ஒரு லேசி இயக்குனர்.. அதனால் என்னுடைய ஸ்கிரிப்டை வேறு நபர்களுக்கு கொண்டுக்கும் எண்ணத்தில் இருக்கிறேன்.  என் அப்பா என்னை வழக்கறிஞர் ஆக வேண்டும் என்றார். நான் அப்போது பாலுமஹேந்திராவிடன் அசிஸ்டண்ட் ஆக சேர வேண்டும் என்றேன்.. பாலு மஹேந்திராவா யாரு அவன் என்று கேட்டவர் என் அப்பா? .. அவர் ஒரு விஞ்ஞானி அவருக்கு சினிமா பற்றி எல்லாம் தெரியாது.. சினிமா என்பது ஒரு போர்.. அதற்கான ஆயுதத்தோடு தான் உள்ளே வர வேண்டும்.  எதற்காக பிளிம் மேக்கர் ஆக வேணும் என்ற பதில் தெரிந்த பின்பு தான் சினிமாவுக்கு வர வேண்டும்.  மாணவர்களுக்கு Take a boy frnd, take a girl frnd என்று சொன்னதும் அனைவரும் சிரிக்க.. இது சிரிக்க வேண்டிய விஷியம் இல்லை என அறிவுரை வழங்கினார். 

ஆரம்ப கட்டத்தில் 6 தயாரிப்பாளர்களிடம் அட்வாண்ஸ் வாங்கி டிராப் ஆகி உள்ளது.. அப்போது அது டிராப் ஆனது பரவாயில்லை என்று தோன்றும். அப்போது படம் பண்ணியிருந்தால் நன்றாக வந்திருக்குமா என்று தெரியவில்லை.  படம் எடுப்பதில் என் அறிவை பயன்படுத்துவதே இல்லை. அதை கடைசியாக தான் பயன்படுத்துவேன். உணர்வை பொறுத்துதான்.. என்னுடைய தவறை சரி செய்ய நான் தயங்கியதில்லை.

மேலும் படிக்க | உதயநிதி அடித்த கிண்டலில் கடுப்பான சர்ச்சை சாமியாரின் ரியாக்ஷன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News