மக்கள் இயக்கமாக உருவாக்கி, குடிமராமத்து திட்டத்தை தொடர்ந்து நிறைவேற்றுகிறோம்: EPS

தமிழகத்தில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்!!

Last Updated : Nov 15, 2019, 05:55 PM IST
மக்கள் இயக்கமாக உருவாக்கி, குடிமராமத்து திட்டத்தை தொடர்ந்து நிறைவேற்றுகிறோம்: EPS title=

தமிழகத்தில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்!!

சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர் ஆர்.பி உதயகுமார், மற்றம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். பொதுப்பணித் துறை சார்பாக கட்டிடங்கள் மற்றும் நீர்வள துறை நிலை குறித்து பேசிய முதலமைச்சர்; இன்றைக்கு நீர் மேலாண்மை மிக முக்கியமான ஒன்று. அந்த நீர் மேலாண்மையை சிறப்பான வகையிலே அரசு கையாள வேண்டும் என்பதற்காகத் தான், இந்த ஆலோசனைக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் மூலமாக, அம்மாவுடைய அரசு அறிவித்த திட்டங்கள், எந்த அளவிற்கு பணி நடைபெற்று கொண்டு இருக்கின்றன, அந்தப் பணியினுடைய விவரங்கள், அதையெல்லாம் ஆராய்ந்து அதற்குண்டான நடவடிக்கைகள் எடுப்பதற்கு தான் இந்த ஆலோசனைக் கூட்டம்.

ஏற்கனவே சட்ட மன்றத்தில் சட்டமன்ற 110-வது விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் இங்கே நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன, நடந்து கொண்டு இருக்கின்றன. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், குடிமராமத்து திட்டம். இந்த குடிமராமத்து திட்டத்தை பொறுத்தவரைக்கும், மிக சிறந்த திட்டம் என்று மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. விவசாயிகளிடத்தும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. பருவ காலங்களில் பெய்து வரும் மழைநீர் முழுவதும் சேமித்து வைக்க வேண்டும் என்பதற்காக ஒரு சிறப்பு திட்டமாக, மக்களோடு மக்கள் இயக்கமாக இதை உருவாக்கி இந்த குடிமராமத்து திட்டத்தை, இந்த மூன்றாண்டுகள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு இருக்கிறது என தெரிவித்தார். 

சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அதில் முக்கியமாக குடிமராமத்து திட்டம் மக்களிடமும் விவசாயிகளிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவுத் திட்டமான அத்திக்கடவு - அவிநாசித் திட்டம் செயல்வடிவம் பெற்றுள்ளதாவும் அவர் கூறினார். ஆயிரம் கோடி ரூபாயில் தடுப்பணைகள் கட்டும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர், அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து ஆய்வு செய்யவே இந்த கூட்டம் நடைபெறுவதாகவும் கூறினார். 

 

Trending News