நாள் தோறும் நாம் அலுவலகம் செல்லும் போதும் அல்லது கோயில்களுக்கு செல்லும் போதும் சாலைகள் அல்லது கோயில் வாயில்களில் பலர் பிச்சை எடுப்பதை பார்த்திருப்போம். மக்களும் தர்மம் செய்வதாக நினைத்து தங்களால் முடிந்த பணத்தை அவர்களுக்கு அளிப்பார்கள். ஆனால் சில சினிமாக்களில் குறிப்பாக வடிவேலு காமெடி ஒன்றில் பிச்சை எடுப்பவர்கள் நம்மை விட அதிகம் பணம் சம்பாதிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.
இவை வெறும் காமெடி என்று கடக்க முடியாதவாறு திருப்பூரில் அரங்கேறியுள்ளது ஓர் நிஜ சம்பவம். திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கடைவீதியில் ஏராளமான நபர்கள் தினமும் பிச்சை எடுப்பது வழக்கம். இந்நிலையில் சாட்டையால் அடித்துக் கொண்டு பிச்சை எடுத்த நபர் ஒருவர் சைக்கிள் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைக்கு சென்று பிச்சை கேட்டுள்ளார்.
அப்போது அந்தக் கடையின் உரிமையாளர் கை, கால்கள் நன்றாக தானே இருக்கிறது, என் கடைக்கு வேலைக்கு வா சம்பளம் தருகிறேன் என கூறி உள்ளார். சம்பளம் எவ்வளவு தருவாய் என அந்த பிச்சை எடுக்கும் நபர் கேட்ட போது, 400 ரூபாய் ஒரு நாளைக்கு தருகிறேன் என கூறி உள்ளார்.
மேலும் படிக்க | உடலை விட்டு உயிரை விரட்டிய பெண்: இணையமே சும்மா அதிருது, வீடியோ படு வைரல்
அதற்கு அந்த பிச்சை எடுத்த நபரோ ''400 ரூபாய்க்கு நான் வேலை செய்ய வேண்டுமா? நான் ஒரு நாளைக்கு ரூ.2000 சம்பாதிக்கிறேன்'' என ஏளனமாக பதில் அளிக்கிறார். அதற்கு உரிமையாளர் ''இப்படி ஓசியில் பணம் கொடுத்தால் நீ சம்பாதிக்க தான் செய்வாய்'' என கூறுகிறார்.
அப்போது பிச்சை கேட்ட நபர், ''பிச்சை கொடுப்பதாக இருந்தால் இருக்கு என சொல்லுங்கள், இல்லை என்றால் இல்லை என சொல்லுங்கள். நீ என்னோடு பிச்சை எடுக்க வா, உனக்கு ரூ.2000 தருகிறேன்'' எனக்கூறியபடி அந்த பிச்சை எடுக்கும் நபர் அங்கிருந்து செல்கிறார். கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகிய இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஒரு பிச்சக்காரனுக்கு இவ்ளோ சம்பாத்தியமா? - நிஜமான வடிவேலு காமெடி! pic.twitter.com/OcRKW9Z9fo
— Arunachalam (@Arunachalam1231) May 12, 2022
மேலும் படிக்க | கால்களால் கிலோமீட்டரை கவர் செய்யும் மான்..! - Viral Video
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe