சமீபத்தில் விக்ரம் திரைப்படம் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது. இதற்காக அப்படத்தின் லோகேஷ் கனகராஜுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்த திரைப்படம் லோகேஷ் கனகராஜின் திரைப்படமாகவும், நடிகர் கமல்ஹாசனின் திரைப்படமாகவும் வந்துள்ளதாக பரவலாக விமர்சனங்கள் பெற்று வருகின்றன. இதே லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜயை வைத்து மாஸ்டர் படம் எடுத்தார். அதுவும், ரசிகர்களிடையே கொண்டாடப்பட்டது. வசூலிலும் மாஸ்டர் அசரடித்தது.
மேலும் படிக்க |அப்செட்டில் லோகேஷ் கனகராஜ்! காரணம் என்ன?
எனவே, விஜய் மற்றும் கமல்ஹாசனை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மிகச்சரியாக பயன்படுத்தியிருக்கிறார் என்றும், ஆனால் விஜயை இயக்குநர் நெல்சன் சரியாக பயன்படுத்தவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்தன. இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்போடு வந்த பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்க்கப்பட்ட அளவில் இல்லை என்றும், இதில் விஜயை சரியாக பயன்படுத்தப்படவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்த விமர்சனங்கள் ஒருகட்டத்தில் எல்லை மீறின. அதாவது, லோகேஷ் கனகராஜையும், நெல்சனையும் வைத்து மீம் க்ரியேட்டர்களும், சமூக வலைத்தளங்களிலும் பலர் விமர்சித்தனர். விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து அதன் நடிகரும், தயாரிப்பாளருமான கமல்ஹாசன், படத்தில் வேலை செய்த பலருக்கு பரிசுகளை வழங்கினார். இந்தச் செய்தியைக் கூட மேற்கோள்காட்டி நெல்சனுக்கு என்ன பரிசு தரப்போகிறார் விஜய் என்று பிறருடன் ஒப்பிட்டு விமர்சனங்கள் முகம் சுளிக்க வைக்கும் அளவுக்கு இருந்தன.
ஒருகட்டத்தில், ‘இப்படியெல்லாம் ஒப்பிட்டு பேசாதீர்கள். யாரையும் யாரோடும் ஒப்பிடாதீர்கள். தோல்வி என்பது இயல்பானது. அது எனக்கும் கூட நிகழலாம். தோல்வி அடைந்துவிட்டாலே நெல்சனைத் தாக்குவது சரியில்லை. மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.’ என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளிப்படையாகவே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
மனித வாழ்க்கையில் தோல்வி என்பது மிக இயல்பானது என்றும், இதில் நெல்சனை குறி வைத்து டார்கெட் செய்யும் கும்பல் மனநிலை என்பது ஆபத்தானது என்றும் சமூக ஆர்வலர்களும், எழுத்தாளர்களும்கூட நெல்சனுக்கு ஆதரவாக பதிவிட்டிருந்தனர். வெற்றி மட்டுமே முக்கியம் என்றால் நெல்சனைக் கலாய்க்கும் நபர்களின் வாழ்க்கையில் தோல்வி என்பதே நிகழ்ந்தது இல்லையா? ; தோல்வியும், வெற்றியும் கலந்ததுதானே வாழ்க்கை என்ற யதார்த்த உண்மை இருக்கும் நிலையில் நெல்சனை குறிவைத்து அருவருக்கத்தக்க வகையில் விமர்சிக்கும் யோக்கியதை ‘அவர்களுக்கு’ உண்டா ? என்றும் விவாதங்கள் கிளம்பின.
மேலும் படிக்க | 'விக்ரம்' படத்தின் கதை ரஜினிக்காக எழுதப்பட்டதா? வெளியான தகவல்!
இந்தச் சூழ்நிலையில் நடிகர் ரஜினிகாந்தை வைத்து நெல்சன் இயக்கப்போகும் தலைவர்169 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது. இத்திரைப்படத்திற்கு ‘ஜெய்லர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ரஜினியை வைத்து எப்படி இயக்கப்போகிறார் நெல்சன் என்று எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. டாக்டர் படம் மூலம் அனைவரையும் கவர்ந்த நெல்சன் மீண்டு வருவார் என்று அவருக்கு ஆதரவாகவும் குரல்கள் எழும்பத்தொடங்கியுள்ளன. அதன் தொடர்ச்சியாக நெல்சனின் நண்பரும், இயக்குநருமான விக்னேஷ் சிவன் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் நெல்சனுக்கு ஆதரவாக விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார்.
Vaaa Nanbaaaa Vaaa @Nelsondilpkumar @rajinikanth Thalaivaroddaaa best film ah idhu irukkumm!!! Rock the show with your immense capabilities dearest Nelson with our amazing @anirudhofficial
Kudos to @sunpictures #Jailer the #Thalaivar169 pic.twitter.com/HJoY3at7mz
— Vignesh Shivan (@VigneshShivN) June 17, 2022
அந்தப் பதிவில், ‘வா..நண்பா..வா.! தலைவரோட பெஸ்ட் படமா இது இருக்கணும். அனிருத்துடன் இணைந்து, உன்னோட சிறப்பான திறமையால் எல்லோரையும் ஆச்சரியப்படுத்து நெல்சன்’ என்று வாழ்த்தியுள்ளார்.
மீண்டு வாருங்கள் நெல்சன்.!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR