வற்புறுத்தி திணிக்கப்படும் வட மாநிலத்தவர்களால் பேராபத்து -தவாக தலைவர் வேல்முருகன்

Velmurugan Warns TN Govt: வட இந்தியர்களால் திராவிட மாடலுக்கு பேராபத்து இருக்கிறது. தமிழக அரசு உடனடியாக கண்காணிக்க வேண்டும் என தவாக தலைவர் வேல்முருகன் கோரிக்கை. 

Written by - Shiva Murugesan | Last Updated : Jan 12, 2023, 04:33 PM IST
  • தமிழ்நாடு வட இந்தியர்களின் வேட்டை காடாக மாறி வருகிறது.
  • சேது சமுத்திரம் திட்டம் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
  • ராமர் பாலம், தமிழகத்திற்கும் திமுகவிற்கும் கிடைத்த வெற்றி.
வற்புறுத்தி திணிக்கப்படும் வட மாநிலத்தவர்களால் பேராபத்து -தவாக தலைவர் வேல்முருகன் title=

T Velmurugan Press Meet: சேது சமுத்திரம் திட்டம் தொடங்கும் இடத்தில் ராமர் பாலம் இருக்கிறது என்று சொன்ன பாஜக, இப்போது இல்லை என்று கூறுகிறது. இது தமிழகத்திற்கும் திமுகவிற்கும் கிடைத்த வெற்றி என தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மேலும் தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு வட இந்தியர்களின் வேட்டை காடாக மாறி வருகிறது. வட இந்தியர்களால் திராவிட மாடலுக்கு பேராபத்து இருக்கிறது. எனவே தமிழக அரசு உடனடியாக கண்காணிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். 

செய்தியாளர்கள் சந்திப்பில் தவாக தலைவர் வேல்முருகன் கூறியது,

சேது சமுத்திரம் திட்டம். 150 ஆண்டுகாலம் கனவு திட்டம். இந்தியா தமிழகம் வளர்ச்சிக்கு இந்த திட்டம் பயன் உள்ளதாக இருக்கும். சேது சமுத்திரம் திட்டத்தில் மணலை அள்ளும் போது மண் சரிவு ஏற்படும் என்று சொல்கிறார். மேலும் அங்கு பவள பாறைகளுக்கு பாதிப்பு இல்லாமல் மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். பல்லாயிரம் கோடி செலவு ஆகும் சேது சமுத்திரம் திட்டம் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். 

மேலும் படிக்க: ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் - திருமாவளவன் அழைப்பு

சேது சமுத்திரம் திட்டம் தொடங்கும் இடத்தில் ராமர் பாலம் இருக்கிறது என்று சொன்ன பாஜக, இப்போது ராமர் பாலம் இல்லை என்று அறிவித்துள்ளனர். இது தமிழகத்திற்கும் திமுகவிற்கும் கிடைத்த வெற்றி. நெய்வேலி என்.எல்.சிக்கு.நிலம் கொடுத்தவர்கள் போராடி கொண்டு இருக்கிறார்கள். அங்கு வேலை வாய்ப்பை உறுதி செய்து விட்டு நிலம் கையகப்படுத்த வேண்டும்.

வட மாநிலத்தவர்களால் தமிழகத்தில் கொலை நடக்கிறது. தமிழ்நாட்டில் எந்த இடத்திற்கு சென்றாலும் வடமாநிலத்தவர்கள் தான் இருக்கிறார்கள். டி.என்.பி.எஸ்.சி தேர்வு மூலம் வட மாநிலத்தவர்களுக்கு பணி கிடைக்கும் வழியை மாநில அரசு ரத்து செய்ய வேண்டும்.

தமிழ்நாடு வட இந்தியர்களின் வேட்டை காடாக மாறி வருகிறது. இந்த அபாயத்தை தடுக்க வேண்டும். தமிழக அரசு இதையெல்லாம் கண்காணிக்க வேண்டும். வட இந்தியர்களால் திராவிட மாடலுக்கு பேராபத்து இருக்கிறது. வட இந்தியர்களால் இன கலவரமாக ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. நான் வட மாநில அப்பாவி கூலி தொழிலாளிகளை எதிர்க்கவில்லை வற்புறுத்தி திணிக்கப்படும் வட மாநிலத்தவர்களை தான் எதிர்க்கிறேன் என்றார்.

மேலும் படிக்க: நொய்யல் ஆற்றை மீட்கும்வரை ஓய்வு கிடையாது - அன்புமணி ராமதாஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News