மிக்ஜாம் புயல்: 8000 மணல் மூட்டைகள்... 31 புல்டோசர், 24 ஜேசிபி - வேலூரில் ஏற்பாடுகள் தயார்

மிக்ஜாம் புயல் தமிழகத்தை தாக்க இருக்கும் நிலையில் மீட்பு பணிகளுக்காக 8000 மணல் மூட்டைகள் மற்றும் ஜேசிபி, புல்டோசர் இயந்திரங்கள் வேலூர் மாவட்டத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.   

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 3, 2023, 06:33 PM IST
  • தமிழகத்தை நெருங்கும் மிக்சாங் புயல்
  • கடலோர மக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை
  • வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்
மிக்ஜாம் புயல்: 8000 மணல் மூட்டைகள்... 31 புல்டோசர், 24 ஜேசிபி - வேலூரில் ஏற்பாடுகள் தயார் title=

வேலூர் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. டிசம்பர் 4 ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "மாவட்டத்தில் மழை பாதிக்கும் பகுதிகளாக 23 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வருவாய்த்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மழையால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைப்பதற்காக , சுமார் 5000 பேர் தங்கும் வகையில் மாவட்டத்தில் 26 தங்கும் இடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | “மிக்ஜாம் புயல்” நா ரெடி தான் வரவா.. மக்களே வெளியே செல்லாதீர்கள்! செல்பி வேண்டாம்

பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க வேலூர் ஆட்சியர் அலுவலகம் எஸ்.பி அலுவலகம் மாநகராட்சி அலுவலகம் மற்றும் மாவட்டத்தில் உள்ள 6 தாலுகா அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. மழையால் தொற்று ஏற்படாமல் இருக்க பொதுமக்கள் பரிசோதனை மேற்கொள்ள 38 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் தேவை இன்றி வெளியே வர வேண்டாம். 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை 1077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

புயலால் ஏற்படும் சேதங்களை சீரமைக்க 312 மரம் அறுக்கும் இயந்திரங்கள், 24 ஜேசிபி இயந்திரங்கள், 31 பில்டோசர்கள், 22 டீசல் இன்ஜின், சுமார் 8000 மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ; பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிடுமாறும்" கேட்டுக் கொண்டுள்ளார். இதேபோல் மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கையாக சென்னை திருச்சினாங்குப்பம் கடற்கரையில் மிதவை  வழிகாட்டி வைக்கப்பட்டுள்ளது. இது கடலுக்குள் இருக்கும் விசைபடகுகளுக்கு வழிகாட்டும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும் புயல் கரையை கடக்க இருப்பதால் பொதுமக்களுக்கு அப்பகுதியில் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மீனவர்களும் படகுகளை பத்திரப்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மீனவர்கள் தங்களின் படகுகளை டிராக்டர் உதவியுடன் பாதுகாப்பான இடங்களுக்கு இழுத்துச் சென்றனர்.

மேலும் படிக்க | மிக்ஜாம் புயல்: குளமாகும் காஞ்சிபுரம் - 24 மணி நேரத்தில் கொட்டிய 211 மிமீ மழை..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News