மக்களவை தேர்தல்: சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் முன்னிலை

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் அங்கம் வசித்த விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்டுள்ள அதிமுக சார்பாக சந்திரசேகர் போட்டியிட்டார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 23, 2019, 02:13 PM IST
மக்களவை தேர்தல்: சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் முன்னிலை title=

சிதம்பரம்:  சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் அங்கம் வசித்த விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்டுள்ள அதிமுக சார்பாக சந்திரசேகர் போட்டியிட்டார்.

17-வது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி மே 19-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. நாடு முழுவதும் உள்ள மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவானது நடைபெற்றது.

இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படும் நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழகத்தின் 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றது.

காலை 8 மணிக்கு ஆரம்பமான வாக்கு எண்ணிக்கையில் சிதம்பரம் தொகுதியில் முதலில் அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்து வந்தார். தற்போதைய நிலவரப்படி, பானை சின்னத்தில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் முன்னிலை பெற்றுள்ளார்.

Trending News