விசிக - பாஜக மோதல்: நிபந்தனை முன் ஜாமீன் பெற்ற காயத்ரி ரகுராம்!

முன்ஜாமீன் வழங்க கோரி பாஜக கட்சியின் கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 25, 2022, 04:59 PM IST
  • அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கைகலப்பு
  • பாஜக மீது வழக்குப்பதிவு செய்த போலீஸ்
  • காயத்ரி ரகுராம் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
விசிக - பாஜக மோதல்: நிபந்தனை முன் ஜாமீன் பெற்ற காயத்ரி ரகுராம்! title=

டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விசிக-வினருடன் தகராறில் ஈடுப்பட்டதாக பதிவான வழக்கில் பாஜக-வை சேர்ந்த காயத்ரி ரகுராமுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏப்ரல் 14ஆம் தேதி டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா சென்னை கோயம்பேட்டில் கொண்டாடப்பட்ட போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினர். அப்போது அங்குவந்த பாஜக-வை சேர்ந்தவர்கள், விசிக தலைவர் திருமாவளவன் குறித்து விமர்சித்ததாக இரு கட்சியினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக இரு தரப்பிலும் கோயம்பேடு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைப் பாராட்டிய பாஜக எம்.எல்.ஏ.!

இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க கோரி பாஜக கட்சியின் கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில் இரு தரப்பிற்கும் ஏற்பட்ட தகராறில் கட்சி கொடிகளை கீழே போட்டு மிதித்ததாகவும், கல்வீசி தாக்கியதாகவும், விசிக சார்பில் புதிய குமார் என்பவர் அளித்த புகாரில் தன் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் கட்சியுடன் கூட்டணியில் உள்ள காரணத்தினால் விசிக தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரை முதலில் எடுத்து கொண்டனர் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த தகராறு குறித்து முதல் தகவல் அறிக்கையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கூறப்பட்டுள்ள அனைத்தும் உண்மைக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | ஹிஜாப்க்கு பைபை... பைபிள் பிரச்சனைக்கு வெல்கம்..! கர்நாடகாவில் மீண்டும் சர்ச்சை!

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தான் முதலில் தாக்குதலில் ஈடுபட்டனர் எனவும், ஏற்கனவே சமூக வலைதளங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உடன் கட்சி சார்ந்த சண்டைகளும் நடைபெற்று வருவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், 30 நாட்களுக்கு விசாரணை அதிகாரி முன்பு தினமும் ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனையுடன் காயத்ரி ரகுராமுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News