கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை...

கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!!

Last Updated : Oct 31, 2019, 08:11 AM IST
கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை... title=

கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!!

அரபிக்கடலை ஒட்டிய பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியதாகவும், இந்த புயலுக்கு  ‘மகா’ என பெயரிடப்பட்டுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், ‘லட்சத்தீவு பகுதியில் நிலைகொண்டுள்ள ‘மகா’புயல் நாளை தீவிர புயலாக மாறும். திருவனந்தபுரத்தில் இருந்து 320 கி.மீ., மேற்கு வடமேற்கு திசையில் நிலைகொண்டுள்ள இந்த புயல், லட்சத்தீவு பகுதியில் இருந்து 25 கி.மீ., வேகத்தில் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. மகா புயலால் காற்றின் வேகம் 95 கிலோ மீட்டரில் இருந்து 110 கிலோ மீட்டராக இருக்கும்’ என்று கூறியுள்ளது.

இதன்காரணமாக ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நீலகிரி மாவட்டத்தின் உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி ஆகிய தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், கொடைக்கானல் தாலுக்காவிலுள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

Trending News