‘தமிழ்நாடு’ என்ற பெயர் திமுகவின் கண்டுபிடிப்பல்ல! - வானதி சீனிவாசன் விளக்கம்

vanathi Srinivasan Blames DMK : தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்ட நாள் எப்போது ? நவம்பர் -1ம் தேதியா அல்லது ஜூலை 18ம் தேதியா ? வானதி சீனிவாசன் சொல்லும் விளக்கம் என்ன ?  

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Jul 20, 2022, 09:07 PM IST
  • தமிழ்நாடு உருவான நாள் எப்போது ?
  • கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் விளக்கம்
  • தமிழக மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துவது ஏன் ?
‘தமிழ்நாடு’ என்ற பெயர் திமுகவின் கண்டுபிடிப்பல்ல! - வானதி சீனிவாசன் விளக்கம்  title=

இதுதொடர்பாக கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் விடுத்துள்ள அறிக்கையின் சாராம்சங்களைப் பார்க்கலாம்!

‘கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு உருவான தினம் நவம்பர் 1-ம் தேதி கொண்டாடப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜூலை 18-ம் தேதியை தமிழ்நாடு தினமாக கொண்டாடி வருகிறது. இதனால், தமிழக மக்களுக்கு தேவையற்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இன்றைய நிலப்பரப்பு, எல்லையுடன் 1956-ம் ஆண்டு, நவம்பர் 1-ம் தேதி தான், தமிழ்நாடு உருவானது. அப்போது, நம் மாநிலத்தின் பெயர் சென்னை மாகாணம். 1967-ம் ஆண்டு, ஜூலை 18-ம் தேதி, தமிழக சட்டப்பேரவையில், சென்னை மாகாணத்தை, தமிழ்நாடு என பெயர் மாற்றும் தீர்மானத்தை, அன்றைய முதல்வர் அண்ணா நிறைவேற்றினார்.

மேலும் படிக்க | ஆளுநரை வம்பு சண்டைக்கு இழுப்பதுதான் திமுகவின் வேலை - அண்ணாமலை காட்டம்

அதுபோல மைசூர் மாகாணம், 1972 ஜூலை29-ல் கர்நாடகம் என பெயர் மாற்றப்பட்டது. தமிழ் மொழி பேசும் பகுதிகள் தனி மாநிலமாக உருவாக்கப்படுவதற்கு முன்பே, தமிழ்நாடு என்ற பெயர் சங்ககாலம் முதலே பயன்பாட்டில் இருந்து வருகிறது. சங்க இலக்கியங்களிலும் தமிழ்நாடு என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாகாணத்தின் பெயரை, தமிழ்நாடு என மாற்றக்கோரி, விருதுநகர் சங்கரலிங்கனார், 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து, 1956 அக்டோபர் 13-ம் தேதி உயிர்த் தியாகம் செய்தார். 1961 பிப்ரவரி 24-ம் தேதி சட்டப்பேரவையில் பேசிய அன்றைய நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம், “மாநில அரசின் அறிக்கைகள், ஆணைகளில் தமிழ்நாடு என்ற பெயர் பயன்படுத்தப்படும்" என அறிவித்தார். தமிழ்நாடு என்ற பெயர் திமுகவின் கண்டுபிடிப்பு அல்ல.

குழந்தை பிறந்த தினத்தை தான், பிறந்த நாளாக கொண்டாடுகிறோம். குழந்தைக்கு பெயர் வைத்த நாளை உலகில் யாரும் கொண்டாடுவதில்லை.

கர்நாடகா என பெயர் மாற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஜூலை 29-ம் தேதியை, கர்நாடக தினமாக அவர்கள் கொண்டாடவில்லை. எனவே, நவம்பர் 1 தமிழ்நாடு தினம் என்ற அரசாணையை, ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நவம்பர் 1-ம் தேதியை, தமிழ்நாடு தினமாகவும், ஜூலை 18-ம் தேதியை, தமிழ்நாடு தீர்மான நாளாகவும் கொண்டாடலாம். இல்லையெனில், தமிழ்நாடு என்ற மாநிலமே 1967 ஜூலை 18-ம் தேதி தான் உருவானது என்பதுபோல மக்கள் மனங்களில் பதிந்து விடும்.

மேலும் படிக்க | திமுகவின் பக்கம் எல்லாவற்றையும் திருப்புகிறாரா எடப்பாடி பழனிச்சாமி ?

தமிழ்நாடு தினத்தை தி.மு.க., அரசு மாற்றினால், ஆட்சி மாறும்போது மீண்டும் மாறும். அதனால் தேவையற்ற குழப்பம்தான் மிஞ்சும். இந்திய நாட்டின் பிரிக்க முடியாத அங்கமான தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உழைக்க, நவம்பர் 1 தமிழ்நாடு தினம், ஜூலை 18 தமிழ்நாடு தீர்மான நாள் என, இரு நாட்களிலும் உறுதியேற்போம்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News