வேலு நாச்சியார் வாழ்க்கை திரைப்படமாகும்: வைகோ

Last Updated : Oct 10, 2017, 11:37 AM IST
வேலு நாச்சியார் வாழ்க்கை திரைப்படமாகும்: வைகோ title=

தமிழ்நாட்டின் ஒரு பகுதியான சிவகங்கை சீமையை ஆங்கிலேயார்கள் கைப்பற்றிய பிறகு தலைமறைவாக இருந்து படை திரட்டி அவர்களை தோற்கடித்து மீண்டும் ஆட்சியை பிடித்த வீரப் பெண்மணி வேலு நாச்சியார். உலகில் முதல் பெண்கள் படைப்பிரிவையும், தற்கொலை படைப்பிரிவையும் உருவாக்கியவர் வேலு நாச்சியார்.

வேலுநாச்சியார் வாழ்க்கையை சொல்லும் நாட்டிய நாடகத்தை ஸ்ரீராம் சர்மா என்பவர் நடத்தி வருகிறார். நேற்று இந்த நாட்டிய நாடக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அப்போது பேசிய வைகோ, இந்த நாடகமானது விரைவில் சினிமாவாகும் என அறிவிப்பை வெளியிட்டார். 

மேலும் அவர் பேசுகையில், வேலுநாச்சியார் திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு, அதை கண்ணகி பிலிம்ஸ் மூலம் தயாரிப்பதில் பெருமைபடுகிறேன். இந்த நாடகத்தை இயக்கிய ஸ்ரீராம் சர்மாவே இந்த படத்தையும் இயக்குகிறார்.

இவ்வாறு வைகோ பேசினார்.

மேலும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விஷால் பேசியது, இந்த நாடகத்தில் வேலுநாச்சியார் கதாபாத்திரத்தில், பெரிய மருது, சின்ன மருது கதாபாத்திரத்தில் நடித்தவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். 

பிரிட்டிஷ் அரசருக்கு வரிகட்டுவதை எதிர்த்து வேலுநாச்சியார் போராடினார். தமிழக அரசை கேளிக்கை வரியை ரத்து செய்ய வைப்பது எப்படி என்று நாங்கள் போராடி கொண்டு இருக்கிறோம். 

நான் கத்தியால் சண்டை போட போவதில்லை, புத்தியால் தான் சண்டை போட போகிறேன். கண்டிப்பாக நல்ல தீர்வு கிடைக்கும்.

இவ்வாறு விஷால் பேசினார்.

Trending News