மூன்று ஆண்டுகளுக்கு பின் கருணாநிதியை சந்திக்கும் வைகோ

Last Updated : Aug 22, 2017, 03:27 PM IST
மூன்று ஆண்டுகளுக்கு பின் கருணாநிதியை சந்திக்கும் வைகோ title=

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திமுக தலைவர் கருணாநிதியை இன்று மாலை சந்திக்கிறார்.

கடந்த சில மாதங்களாக திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் நலம் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று மாலை இவரை சந்திக்கிறார். 

2014-ம் ஆண்டு அருள்நிதி திருமணத்தின் போது கருணாநிதியை வைகோ நேரில் சந்தித்தார். அதற்குப் பிறகு, சுமார் மூன்று ஆண்டுகள் கழித்து இருவரும் நேரில் சந்திக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News