தமிழகத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல முடியாத மலை கிராமங்களுக்கு சென்று மருத்துவ சிகிச்சை அளிக்கும் விதமாக 25 இருசக்கர ஆம்புலன்ஸ் வாகனங்கள் பிரத்யேகமாக தயார் செய்யபட்டு வருவதாகம், அவை விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் உதகை தெரிவித்துள்ளார். சென்னையில் திறக்கப்பட்டுள்ள செயற்கை கருத்தரிப்பு மையத்திற்கு சிறப்பான வரவேற்பு இருப்பதால் மதுரையை தொடர்ந்து கோவை, திருச்சி ஆகிய இடங்களிலும் விரைவில் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். உதகை அருகே பட்பயர் பகுதியில் நடைபெற்று வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகளை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்.
மேலும் படிக்க | திராவிட மாடலுக்கு அடித்தளம் அமைத்தவர் கருணாநிதி!
அவசர சிகிச்சை பிரிவு, ஸ்கேனிங் மையம், அறுவை சிகிச்சை பிரிவு, நோயாளிகள் படுக்கை வார்டு ஆகியவற்றை ஆய்வு செய்த மா. சுப்பிரமணியன், நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக 407 கோடி மதிப்பில் பல்வேறு மருத்துவ கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி உதகையில் அரசு மருத்துவ கல்லூரியை தமிழக முதல்வர் தொடங்கி வைத்ததாகவும், அதில் 150 மாணவர்கள் தற்போது பயின்று வரும் நிலையில் அதற்காக 700 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டுமான பணி நடைபெற்று வருவதாகவும் கூறினார். கட்டுமான பணியினை தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும் இன்னும் இரண்டு மாத காலங்களில் இந்த மருத்துவமனையை தமிழக முதல்வர் திறந்து வைக்க இருப்பதாக கூறினார். உதகையில் திறக்கப்படும் இந்த மருத்துவமனை இந்தியாவிலேயே ஒரு மலை நகரத்தில் 700 படுக்கைகள் கொண்ட முதல் மருத்துவமனை என்ற பெயரை பெறும் என்றார்.
அதனை தொடர்ந்து தமிழக சுகாதார சுகாதாரத் துறையில் காலியாக உள்ள இடங்களில் நிரப்புவது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, இந்தியாவில் முதல்முறையாக பணியில் சேர்ப்பவர்களுக்கு கவுன்சிலிங் நடத்தி விரும்பிய இடத்தில் பணியை அமர்த்துவம் நடைமுறையை தற்போதைய தமிழக அரசு மட்டுமே செய்து வருவதாகவும், விரைவில் தமிழகத்தில் காலியாக உள்ள கிராமப்புற செவிலியர் பணியிடங்களும், 986 மருந்தாளுனர்கள் பணியிடமும், 1066 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களும் நிரப்பப்படும் என்றார். மேலும் தமிழகத்தில் தற்போது 1333 ஆம்புலன்ஸ்கள் இருப்பதாகவும், அவை தேவைக்கேற்ப அதிகரிக்கப்படும் என்ற அவர் மலை கிராம மக்கள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு சிகிச்சை அளிக்க பெரிய வாகனங்கள் செல்ல முடியாத நிலை சில இடங்களில் இருப்பதாகவும், இதனை எடுத்து அந்த இடங்களுக்குச் சென்று சிகிச்சை அளிக்கும் விதமாக 25 இருசக்கர ஆம்புலன்ஸ்கள் வழங்க கடந்த பட்ஜெட்டில் முடிவு செய்யப்பட்டதாகவும், அதன்படி 25 இருசக்கர ஆம்புலன்ஸ்கள் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் இந்த இருசக்கர ஆம்புலன்ஸ் சேவை உதகை அல்லது கொடைக்கானலில் தொடங்கி வைக்கப்படும் என்றார்.
மேலும் செயற்கை கருத்தரிப்பு முறை என்பது ஏழை எளிய மக்களுக்கு எட்டாக்கனியாக இருக்கும் நிலையில், தமிழக அரசு சார்பாக சென்னையில் செயற்கை கருத்தரிப்பு மையம் திறக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், அடுத்ததாக மதுரையில் செயற்கை கருத்தரிப்பு மையம் திறக்க பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த பணிகள் முடிந்த பின்னர் கோவை மற்றும் திருச்சி ஆகிய இரண்டு நகரங்களிலும் செயற்கை கருத்தரிப்பு மையம் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ