காங்கிரஸ் எந்தெந்த தொகுதியில் போட்டியிடும் என நாளை அறிவிக்கப்படும்: கே.எஸ்.அழகிரி

திமுக கூட்டணி எந்தெந்த தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிப்பு நாளை வெளியாகும்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 14, 2019, 06:39 PM IST
காங்கிரஸ் எந்தெந்த தொகுதியில் போட்டியிடும் என நாளை அறிவிக்கப்படும்: கே.எஸ்.அழகிரி title=

வரும் 2019 மக்களவை தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதற்கான ஒப்பந்தம் ஏற்கனவே கையெழுத்தாகி உள்ளது. மொத்தம் 10 இடங்களில் காங்கிரஸ் தொகுதி போட்டியிடுகின்றன. அதில் 9 இடங்கள் தமிழகத்திலும், ஒரு இடம் புதுச்சேரியிலும் களம் காங்கின்றனர். 

திமுக தலைமையிலான கூட்டணியில் தோழமை கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டதில் இறுதி முடிவு செய்யப்பட்ட பின்னர், சில நாட்களாக யாருக்கு எந்த தொகுதி வழங்குவது குறித்த ஆலோசனையில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவாரத்தை நடத்தி வந்தது. தற்போது அந்த போச்சுவாரத்தை இறுதி முடிவு எட்டியுள்ளது. 

இந்தநிலையில், திமுக கூட்டணி எந்தெந்த தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என முடிவு செய்யப்பட்டதாகவும், அதுக்குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என்றும், அதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவிப்பார் என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொருத்த வரை வரும் மக்களவைத் தேர்தலில் திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதன் கூட்டணி கட்சிகளுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News