சென்னையில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை: குற்றவாளிகள் போலீசில் சரண்..!

சென்னை மயிலாப்பூரில் பிரபல ரவுடியாக சுற்றித்திரிந்த டோக்கன் ராஜா கொலை வழக்கில், குற்றவாளிகம் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளனர்.   

Written by - Yuvashree | Last Updated : Jul 11, 2023, 07:45 PM IST
  • பிரபல ரவுடி டோக்கன் ராஜா வெட்டிக்கொலை.
  • யார் யாருக்கு தொடர்பு? போலீஸ் விசாரணை.
  • 4பேர் போலீசில் சரண்.
சென்னையில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை: குற்றவாளிகள் போலீசில் சரண்..! title=

சென்னை மயிலாப்பூரில் பிரபல ரவுடியாக வலம் வந்த டோக்கன் ராஜா, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதையடுத்து, அந்த கொலைக்கு காரணமான குற்றவாளிகள் போலீசில் சரண் அடைந்துள்ளனர். 

பிரபல ரவுடி கொலை:

மயிலாப்பூர் பல்லக்குமாநகரை சேர்ந்தவர் டொக்கன் ராஜா (45). சென்னையில் பிரபல ரவுடி சிடி மணியின் கூட்டாளியாக இருந்தார். இவர் மீது  கொள்ளை ஆள் கடத்தல் மேலும் கொலை முயற்சி  கட்டப்பஞ்சாயத்து என 25க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர் மீது  நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு இவர் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார். சம்பவ இடத்திலேயே இவர் உயிர் பிரிந்து விட்டது. இதையடுத்து, மயிலாப்பூர் மாவட்ட துணை ஆணையர் தலைமையில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவைத்தனர். போலீசார் இதுகுறித்த வழக்கு விசாரணையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். 

மேலும் படிக்க | கொடநாடு விசாரணைக்கு அப்போ எதிர்ப்பு இப்போது போராட்டம் - ஓபிஎஸ்-ன் மற்றொரு யூடர்ன்

குற்றவாளிகள் கைது:

டோக்கன் ராஜாவின் கொலை குறித்து தீவிர விசாரணை நடைப்பெற்று வந்ததை அடுத்து, அந்த கொலையில்  தொடர்புடைய நான்கு பேர் திண்டிவனம் காவல் நிலையத்தில் இன்று சரணடைந்தனர். அதன் பின்னர் அவர்கள் சென்னை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இவர்களை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க தனிப்படை போலீசார் அனுமதி கேட்டுள்ளனர். 

பழி தீர்க்க நடந்த கொலை!

சென்னையில், கடந்த 2003 ஆம் ஆண்டு கதிரவன் என்பவரை கொலை செய்த வழக்கில் டோக்கன் ராஜா முக்கிய குற்றவாளி என்பது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது. அந்த கொலைக்கு பழி தீர்ப்பதற்காக டோக்கன் ராஜாவை கொலையானவரின் மகன்கள் ஆட்களை வைத்து கொலை செய்து இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. 

கொலையாளிகளின் விவரம்:

டோக்கன் ராஜா, கதிரவனை கொலை செய்த போது கொலையானவரின் மனைவி கர்பமாக இருந்துள்ளார். கொலை செய்யப்பட்டவருக்கு ஒரு மகனும் இருந்துள்ளார். அந்த இரண்டு பிள்ளைகளும் தற்போது வளர்ந்துவிட்ட நிலையில், அவர்கள்தான் டோக்கன் ராஜாவை பழிதீர்த்துள்ளனர் என்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நரேஷ், ராஜேஷ்,   சபரிநாதன் மற்றும் மனோஜ் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு குறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர். இந்த கொலை வழக்கில் இன்னும் இரண்டு பேருக்கு தொடர்பு இருக்கும் என போலீசார் சந்தேகிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | அரசியலுக்கு வந்தால் சினிமாவில் நடிக்க மாட்டேன்..” விஜய் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News