ரிசார்ட்டிலிருந்து மாறுவேடத்தில் தப்பி வந்த அதிமுக எம்எல்ஏ சரவணன்எங்களை கடத்தி வைத்ததாக புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து ரிசார்ட்டில் போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்தனர். மேலும் எம்.எல்.ஏ.க்கள் கடத்தல் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். எடப்பாடி பழனிச்சாமியை போலீஸ் கைது செய்யலாம் என்பதால் கூவத்தூரில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி மீது கூவத்தூர் போலீசார் ஆள்கடத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்.
Tamil Nadu: On complaint of Madurai MLA S Saravanan,kidnapping case filed against #VKSasikala & K Palanisamy in Kuvathur Police Station pic.twitter.com/qxjlWwT1Bd
— ANI (@ANI_news) February 15, 2017
இந்நிலையில் இன்று ஆளுநரிடம் இருந்து பழனிச்சாமிக்கு அழைப்பு வந்ததுள்ளது. அநேகமாக இன்று மாலை எடப்பாடி பழனிச்சாமி கவர்னர் வித்யாசாகர் ராவை சந்திக்க உள்ளார் என தெரிகிறது.
இதையடுத்து எந்த நேரத்திலும் எடப்பாடி பழனிச்சாமி கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் ஆளுநரிடம் இருந்து பழனிச்சாமிக்கு அழைப்பு வந்ததுள்ளது. அவர் கைது செய்யப்படுவாரா? இல்லை ஆளுநரை சந்திப்பாரா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.