தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடைபெறுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்பார்க்கப்பட்ட இந்த தேர்வை திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் அறிவித்தது. குருப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகளை மே மாதம் நடைபெற இருக்கும் நிலையில், ஜூலை மாதம் குரூப் 4 நடத்தப்படுகிறது. விஏஓ, டைப்பிஸ்ட், ஸ்டேனோ டைப்பிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் உள்ளிட்ட 7,382 காலிப் பணியிடங்கள் இந்த தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளன.
மேலும் படிக்க | ஜூலை 24-ம் தேதி குரூப் 4 தேர்வு: அக்டோபர் மாதம் முடிவுகள் வெளியாகும் என அறிவிப்பு!
இதற்கான அறிவிப்பை கடந்த மாதம் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்டார். தேர்வு அறிவிப்பு வெளியிட்டபோது செய்தியாளர்களை சந்தித்த அவர், " டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 24-ம் தேதி நடைபெறும். தேர்வுக்கு மார்ச் 30 முதல், ஏப்ரல் 28-ம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என கூறியிருந்தார். அறிவிக்கப்பட்டுள்ள காலிப் பணியிடங்களில் 81 பணியிடங்கள் விளையாட்டு பிரிவு மூலம் நிரப்பப்படுகின்றன.
எஞ்சியிருக்கும் 7301 பணியிடங்களுக்கு போட்டித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஜூலை 24-ம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும் இந்த தேர்வின் முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிட டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது. அதன்படி, இதுவரை சுமார் 13 லட்சத்துக்கும் மேலானோர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இன்னும் 3 நாட்கள் மட்டுமே தேர்வுக்கு விண்ணப்பிக்க காலவகாசம் இருப்பதால், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | TNPSC தேர்வில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR