தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு மூலம், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் போன்ற பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. சமீபத்தில் 7,301 காலி பணியிடங்களுக்கான குரூப் -4 போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை தேர்வாணையத் தலைவர் பாலசந்திரன் வெளியிட்டார். இதற்கான தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த காலிபணியிடங்களை எழுத்து தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி வெளியிட்டது. அதன் படி மார்ச் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 28 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி குரூப் 4 எழுத்துத் தேர்விற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதியாகும். விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in or www.tnpscexams.in ஆகிய இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதுவரை 17.80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
மேலும் படிக்க | TNPSC Exam: குரூப் 2, 2A இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - 5529 காலிப்பணியிடங்கள்
இதில் 81 இடங்கள் விளையாட்டு கோட்டா மூலம் நிரப்பப்படும். 274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களும் இதில் அடங்கும்.7,382 பணியிடங்களுக்கு நடக்கவுள்ள குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 17.83 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பதாரர் தங்களுடைய ஒருமுறைப் பதிவுடன் (நிரந்தரப் பதிவு) ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும். விண்ணப்பபதாரரின் பெயர், பிறந்த தேதி, பாலினம், வகுப்பு வாரியான இடஒதுக்கீடு, இடைநிலை கல்விச் சான்று எண் மற்றும் குழுமம், நிரந்தர முகவரி, தொடர்பு முகவரி, அலைபேசி எண், மின்னஞ்சல் போன்ற விவரங்களை நிரந்தரப் பதிவில் சமர்பிக்க வேண்டும்.
குரூப் 4 விண்ணப்பக் கட்டணம்:
* நிரந்தரப் பதிவு கட்டணம் : ரூ.150
* தேர்வுக்கு கட்டணம் : ரூ.100
* அதேபோன்று, ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியர், பழங்குடியினர், நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் ஆகியோர் தேர்வுக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை.
குரூப் 4 விண்ணப்பிப்பதற்கான படிகள்:
* டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தை tnpsc.gov.in பார்க்கவும்
* பதிவுசெய்து, பதிவு/உள்நுழைவு ஐடி மற்றும் கடவுச்சொல்லை உருவாக்க, ‘புதிய பயனர்’ என்பதைக் கிளிக் செய்யவும்
* முகப்புப் பக்கத்திற்குத் திரும்பி, 'ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்' என்பதற்குச் செல்லவும்
* நற்சான்றிதழ்களைப் பயன்படுத்தி உள்நுழைந்து, பதவிக்கான விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்
* ஆவணங்களைப் பதிவேற்றவும் மற்றும் கட்டணம் செலுத்தவும்
* விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பித்து அதன் நகலைப் பதிவிறக்கவும்
* விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
மேலும் படிக்க | TNPSC தேர்வில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR