தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப் - 2 தேர்வு நேற்று நடைபெற்றது. இத்தேர்வுக்கு 11.78 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 9.94 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 1.83 லட்சம் பேர் தேர்வு எழுத வரவில்லை.
காலை 9.30 தொடங்கி பிற்பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெற்ற நிலையில், தேர்வர்கள் 9 மணிக்குள் தேர்வு அறைக்கு வர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. பல்வேறு இடங்களில் தாமதமாக வந்த தேர்வர்கள் திருப்பி அனுப்பப் பட்டனர். இந்த தேர்வில் தவறான கேள்விகள் இடம் பெற்றிருந்ததாக தகவல் வெளியானது. ஆனால் இதனை டிஎன்பிஎஸ்சி மறுத்துள்ளது.
மேலும் படிக்க | நாளை நடக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் -2 தேர்வு குறித்த முழு விவரம்!
குரூப் 2, 2ஏ தேர்வில் தவறான கேள்விகள் ஏதும் இடம்பெறவில்லை எனவும், மொழிபெயர்ப்பு மற்றும் விடைக்கான ஆப்ஷன்களிலும் எந்த தவறும் இல்லை எனவும் டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்துள்ளது. மேலும், தற்காலிக விடைக்குறிப்பு 5 நாட்களுக்குள் வெளியிடப்படும் எனவும், அதில் ஏதும் ஆட்சேபணைகள் இருந்தால் தேர்வர்கள் கருத்து தெரிவிக்க ஒரு வாரம் அவகாசம் வழங்கப்படும் எனவும் டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்துள்ளது.
இந்த தேர்வின் மூலம் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர் உள்ளிட்ட 116 நேர்முகத் தேர்வு கொண்ட காலி பணியிடங்களுக்கும், நகராட்சி கமிஷனர், தலைமைச் செயலக உதவிப்பிரிவு அலுவலர் உள்பட 5,413 நேர்முகத் தேர்வு இல்லாத காலி பணியிடங்களுக்கும் நிரப்பப்பட உள்ளது
மேலும் படிக்க | டிஎன்பிஎஸ்சி தேர்வு ஜூலை 2 ஆம் தேதிக்கு மாற்றம்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR