கொரோனா பரவல் காரணமாக பொதுத் தேர்வுகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக திட்டமிட்டபடி நடத்தப்படவில்லை. அதன்படி இந்த ஆண்டு 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. மூன்று திருப்புதல் தேர்வுகள் நடைபெற்றது.
இந்த நிலையில் பொதுத்தேர்வுக்கு முன்னதாக செய்முறைத் தேர்வுகள் இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் இன்று தொடங்கி மே 2 ஆம் தேதி வரை நடைபெறும். தற்போது இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் சுமார் 19 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு மாவட்டத்திலும் பல கட்டங்களாக தேர்வுகள் நடைபெற உள்ளன.
மேலும் படிக்க | பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் ஹால் டிக்கெட் பெறுவது எப்படி
சென்னையை பொறுத்தவரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வில் பங்கேற்கின்றனர். தேர்வுத் துறை பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. அதன்படி வழக்கம் போல் 3 மணி நேரம் நடத்தப்படும் செய்முறைத் தேர்வானது தற்போது பள்ளிகளின் பரிந்துரையின்படி 2 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மதிப்பெண்கள் 50 லிருந்து 30ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதில் 10 மதிப்பெண்கள் அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் ஆகும்.
இதற்கிடையில் தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருகிற மே 6 ஆம் தேதி தொடங்கி மே 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதேபோல் மேலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருகிற மே 5 ஆம் தேதி தொடங்கி மே 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதேபோல் பொது தேர்வு முடிவுகள் பிளஸ் 2 வகுப்புக்கு ஜூன் 23ம் தேதியும், பிளஸ் 1 வகுப்புக்கு ஜூலை 7ம் தேதியும், பத்தாம் வகுப்புக்கு ஜூன் 17ம் தேதியும் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுத்தேர்வு அட்டவணை:
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பாடவாரியான அட்டவணை
11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பாடவாரியான அட்டவணை
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பாடவாரியான அட்டவணை
மேலும் படிக்க | பள்ளி மாணவன் மீது பள்ளி வேன் மோதியதில் மாணவன் பரிதாபமாக பலி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR