TN Lockdown News: தமிழகத்தில் அமலுக்கு வந்த தளர்வுகள், எவை அனுமதி

தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் புதிய தளர்வுகள் அமலுக்கு வந்தன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 7, 2021, 07:51 AM IST
  • தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு
  • 38 மாவட்டங்களிலும் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது
  • மீன் இறைச்சி கூடங்கள் மொத்த விற்பனை மட்டுமே அனுமதி
TN Lockdown News: தமிழகத்தில் அமலுக்கு வந்த தளர்வுகள், எவை அனுமதி title=

கொரோனாவின் இரண்டாவது அலை பரவத் தொடங்கியதில் இருந்து, தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தது. ஆனால், கடந்த சில தினங்களாக இந்த வைரசின் தாக்கம் குறைந்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில் ஊரடங்கு தளர்வு செய்யபட்டு வருகிறது.

அந்தவகையில் தமிழகத்தில் கொரோனா (Corona Spread) பரவல் காரணமாக கடந்த மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு (Full Lockdown) பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் மக்கள் இந்த ஊரடங்கை பொருட்படுத்தவில்லை என்பதால், மேலும் ஒரு வாரம் காலம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு பயனால் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைய தொடங்கியுள்ளது.

ALSO READ | மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்: தமிழக அரசு

இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் புதிய தளர்வுகள் அமலுக்கு வந்தன. இன்று முதல் ஊரடங்கு நீட்டிப்பில் புதிய தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி.,

1. காய்கறி ,மளிகை கடைகள், எலக்ட்ரிகல்ஸ், ஹார்ட்வேர்ஸ், வாகன உதிரிப்பாகம் விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை தொடரும்

2. கொரோனா அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் உட்பட 38 மாவட்டங்களிலும் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

3. காய்கறிகள், இறைச்சி, மீன் விற்பனை கடைகள் மாலை 5 மணி வரை செயல்படலாம் . காய்கறி, பழம், பூ விற்பனை செய்யும் கடைகள் மாலை 5 மணி வரை செயல்படலாம். 

4. மீன் இறைச்சி கூடங்கள் மொத்த விற்பனை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளன. 

5. தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் 30% பணியாளர் உடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

6.  தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் 50 சதவீத பத்திரப்பதிவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தினமும் 50 சதவீதம் டோக்கன் மட்டுமே வழங்கப்பட்டு பத்திரப்பதிவு நடத்தலாம்.

7. தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50% பணியாளர் உடன் நிலையான வழிகாட்டும் நெறிமுறைகள் உடன் செயல்படலாம்.

8. கோவை, திருப்பூர், நாமக்கல் ,ஈரோடு, கரூர், சேலம், திருச்சி ,மதுரையில் ஏற்றுமதி நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதனால் ஏற்றுமதி நிறுவனங்கள் 10 சதவீத பணியாளர்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் செயல்படலாம்.

9. கொரோனா குறையாத 11 மாவட்டங்களில் வாடகை, ஆட்டோ, கார்களுக்கு தடை தொடர்கிறது.

10. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் சுயதொழில், கார், பைக் பழுதுபார்க்கும் கடைகள் செயல்பட அனுமதி இல்லை.

ALSO READ | ரேஷன் கடைகளில் அளிக்கப்படும் 14 மளிகை பொருட்களின் முழு விவரம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News