Tamil Nadu: 3 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா உறுதி - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா வைரஸ் தொற்றைத் தொடர்ந்து அடுத்து, டெல்டா பிளஸ் குறித்த அச்சங்கள் அனைவரது மனங்களையும் ஆக்கிரமித்து உள்ளன. இது குறித்த பல முன்னெச்சரிகை நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருகின்றது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 25, 2021, 06:03 PM IST
  • கொரோனா வைரஸ் தொற்றைத் தொடர்ந்து டெல்டா பிளஸ் அச்சம்.
  • தமிழகத்தில் 3 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது-அமைச்சர்.
  • உலகளவில் 11 நாடுகளில் 200 பேருக்கு டெல்டா பிளஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்.
Tamil Nadu: 3 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா உறுதி - அமைச்சர் மா.சுப்பிரமணியன்  title=

சென்னை: கொரோனா வைரஸ் தொற்றைத் தொடர்ந்து அடுத்து, டெல்டா பிளஸ் குறித்த அச்சங்கள் அனைவரது மனங்களையும் ஆக்கிரமித்து உள்ளன. இது குறித்த பல முன்னெச்சரிகை நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருகின்றது.

டெல்டா பிளஸ் வகை குறித்து இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் (M Subramaniam) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொது அவர், "தமிழகத்தில் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகள், பெங்களூருவில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டன. அப்படி அனுப்பப்பட்ட 1100 மாதிரிகளில் 3 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது" என்று கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களில், சென்னை கொரட்டூர் பகுதியிலிருந்து ஒருவரும், காஞ்சிபுரத்திரத்திலிருந்து ஒருவரும், மதுரையை சேர்ந்த ஒருவரும் இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்த நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், அவர்களில் யாருக்கும் டெல்டா பிளஸ் பாதிப்பு இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். 

டெல்டா பிளஸ் (Delta Plus Variant) பாதிப்பு ஏற்பட்ட அனைவரது நிலையும் சீராக உள்ளதாக அமைச்சர் கூறினார். மதுரையில் பாதிக்கப்பட்ட்டவர் சிகிச்சை பெற்று, குணமடைந்து வீடு திரும்பி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள இருவரும் சிகிச்சையில் உள்ளனர். இருவருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை நடைபெற்று வருகிறது. 

டெல்டா பிளஸ் போன்ற வைரஸ் பரிசோதனைகளை செய்ய, நாட்டில் மொத்தம் 14 இடங்களில் மட்டுமே பரிசோதனை மையங்கள் உள்ளன. தமிழகத்தின் மாதிரிகளை பெங்களூருவுக்கு அனுப்பிதான் பரிசோதிக்க வேண்டியுள்ளது. மாதிரிகள் அனுப்பப்பட்டு பரிசோதனை முடிவு வர சில சமயம் அதிக நேரம் ஆகிவிடுகிறது.

ALSO READ: New COVID-19 variant: புதிய டெல்டா பிளஸ் வகை கொரோனா கண்டுபிடிப்பு

இதனை எடுத்துக்கூறிய அமைச்சர் சுப்பிரமணியம், சென்னையிலேயே (Chennai) இவறுக்கான ஆய்வகங்களை அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார். டெல்டா பிளஸ் போன்ற வைரஸ் மாதிரிகளை கண்டறியக் கூடிய, அதிநவீன வசதிகளுடன் கூடிய பரிசோதனை மையங்களை சுமார் இரண்டரை கோடி ரூபாய் செலவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மத்திய அரசிடம் இந்த பரிசோதனை மையங்களுக்கான அனுமதியை கோரியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார். அனுமதி கிடைத்துவிட்டால், விரைவிலேயே சென்னையில் இதற்கான பரிசோதனை மையம் அமைக்கப்படும். இதன் மூலம் நோய் கண்டறிதலில் ஏற்படும் கால தாமதம் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் உலகம் முழுவதும் டெல்டா பிளஸ் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 11 நாடுகளில் 200 பேருக்கு டெல்டா பிளஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. 

ALSO READ: Black Fungus: கருப்பு பூஞ்சை சிறப்பு நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்தது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News