TN Budget 2021: பெட்ரோல் - டீசல் விலைக்கு ஒன்றிய அரசே பொறுப்பு: நிதியமைச்சர் PTR

TN Budget 2021: சர்வதே சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல் மீதான வரியை ஒன்றிய அரசு உயர்த்துகிறது. பெட்ரோல், டீசல் பயனாளர்களுக்கு நியாயமான நிவாரணம் வழங்க வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசிடமே உள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 13, 2021, 11:15 AM IST
  • கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல் மீதான வரியை ஒன்றிய அரசு உயர்த்துகிறது.
  • தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  • நிவாரணம் வழங்க வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசிடமே உள்ளது.
TN Budget 2021: பெட்ரோல் - டீசல் விலைக்கு ஒன்றிய அரசே பொறுப்பு: நிதியமைச்சர் PTR title=

TN Budget 2021, சென்னை: பெட்ரோல், டீசல் பயனாளர்களுக்கு நியாயமான நிவாரணம் வழங்க வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசிடம் உள்ளது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் தாக்கல் இன்று கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. முதல் முறையாக எலக்ட்ரானிக் வடிவிலான முதல் நிதிநிலை அறிக்கை இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. இ-பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்து தொடர்ந்து பேசி வருகிறார். அரசின் சரிவை நீக்கி நிதிநிலையை சீர்படுத்துவதே திமுக அரசின் நோக்கம். தேர்தல் அறிக்கை அளித்த வாக்குகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

நிறைய புதிய அம்சங்களை பட்ஜெட்டில் தாக்கல் செய்து வரும் பழனிவேல் தியாகராஜன் ஜிஎஸ்டி வரி செயல்பாட்டில் சிக்கல்கள் உள்ளன என்று  கூறினார். வரிமுறையை சீர் செய்வதற்காக சட்ட பொருளாதார வல்லுனர்கள் கொண்ட குழு அமைக்கப்படும். பெட்ரோல், டீசல் பயனாளர்களுக்கு நியாயமான நிவாரணம் வழங்க வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசிடமே உள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

கடந்த மாதமே பெட்ரோல், டீசல் மீது உள்ள வரியைப் பற்றி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருந்தார். பெட்ரோல், டீசல் வரி உயர்வால் ஒன்றிய அரசுக்கு 69% வருவாய் அதிகரித்துள்ளது. பெட்ரோல் மீது ரூ.10 ஆக இருந்த வரியை ஒன்றிய அரசு ரூ.32.90 ஆக உயர்த்தியுள்ளது. ரூ.32.90 வரியில் ரூ.31.50 ஒன்றிய அரசு எடுத்துக்கொள்கிறது. ரூ.32.90 வரியில் ரூ.1.4 மட்டுமே மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வழங்குகிறது. பெட்ரோல், டீசல் மூலம் தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய ரூபாய் 336 கோடி வருவாய் குறைந்துள்ளது என்று கூறியிருந்தார்.  

ALSO READ | கலைஞர் பெயரில் நமக்கு நாமே திட்டம் ₹100 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்

சர்வதே சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல் மீதான வரியை ஒன்றிய அரசு உயர்த்துகிறது. 

தமிழக அரசுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் ரூபாய் 20 மட்டுமே கிடைக்கிறது. பெட்ரோல் பொருட்கள் மீதான மாநில வரியை குறைத்தால் அது மத்திய அரசுக்கு சாதகமாகவிடும். மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய வரித்தொகையை ஒன்றிய அரசு தர மறுக்கிறது. 

சமீபத்தில் அவர் அளித்த வெள்ளை அறிக்கையில் தற்போது தமிழக அரசுக்கு ரூ.5 லட்சத்து 70 ஆயிரம் கோடி பொதுக்கடன் இருக்கிறது என்று கூறியிருந்தார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News