தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற திமுக விரைவில் தமிழகத்தின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி தமிழகத்தின் தற்போதைய நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை இன்று வெளியாக இருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்னர், கடந்த 2001ஆம் ஆண்டு, சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அன்று வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. அதன் பின்னர் இந்த ஆண்டு பொது வெளியில் செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிடப்பட உள்ளது.
இந்த வெள்ளை அறிக்கையை தமிழக நிதி (TN Budget) அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் (Palanivel Thiagarajan) தாக்கல் செய்யவுள்ளார். 120 பக்கங்களைக் கொண்ட வெள்ளை அறிக்கையை வெளியிடுவார் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வெள்ளை அறிக்கையில், அரசின் வருவாய் இழப்புகளுக்கான காரணங்கள், அரசின் கடன் விவரங்கள், ஆகியவை இடம்பெறும் என தெரிகிறது.
ALSO READ: TN Budget: தமிழக பட்ஜெட் வெள்ளை அறிக்கையில் என்ன தகவல் இருக்கும்?
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் (Palanivel Thiagarajan) சமர்ப்பிக்கப்போகும் வெள்ளை அறிக்கையில் சில முக்கிய அம்சங்களை கண்டிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இன்று காலை 11.30 மணியளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கையை வெளியிட இருக்கிறார். அதில், தமிழ்நாட்டின் கடன் சுமை எவ்வளவு என்ற தகவல் தெரியவரும்.
இந்த பட்ஜெட் தொடர்பாக புதிதாக பொறுப்பேற்றிருக்கும் திமுக அரசின் மீது மக்களுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ஏற்கனவே கொரோனா பெருந்தொற்றால் மக்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆகையால், அரசு தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட் மக்களின் சுமையை அதிகரிக்காத வண்ண இருக்க வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.
2001ஆம் ஆண்டு - திமுக ஆட்சி - கடன் அளவு ரூ.34,540 கோடியாக இருந்தது.
2006 ஆம் ஆண்டு - அதிமுக ஆட்சி - கடன் அளவு ரூ.63,848 கோடியாக அதிகரித்தது.
2011ஆம் ஆண்டு - திமுக ஆட்சி - கடன் அளவு 1.14 லட்சம் கோடியாக உயர்ந்தது.
2011 முதல் 2016ஆம் ஆண்டு - அதிமுக ஆட்சி - கடன் அளவு ரூ.2.28 லட்சம் கோடியாக அதிகரித்தது.
2021ஆம் ஆண்டு - அதிமுக ஆட்சி - கடன் அளவு 4.85 லட்சம் கோடியாக அதிகரித்தது.
கடந்த 20 ஆண்டுகளில் கடன் அளவு 1,305 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போது, கொரோனா பாதிப்பால் அரசுக்கு வருவாய் வெகுவாக குறைந்து செலவு அதிகரித்துள்ளது. எனவே, கடன் அளவு எதிர்பார்த்ததைவிட அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: ஆகஸ்ட் 13ம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR