திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகர் பகுதியில் ஆதி திராவிட நலத்துறை அரசினர் மாணவியர் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் ஜவ்வாது மலை புதுநாடு பகுதி கல்கத்தா, பெங்களூர், உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் வந்து 68 மாணவிகள் பயின்று வருகின்றனர். தற்போது, திருப்பத்தூர் மாவட்டத்திற்கு புதிய கலெக்டராக பொறுப்பேற்ற பாஸ்கர பாண்டியன் பல்வேறு அதிரடி செயல்களில் செயல்பட்டு வருகிறார்.
மேலும் படிக்க | இனி இவர்கள் ரேஷன் கார்ட் பெற முடியாது! அதிரடி உத்தரவு!
அவர் ஆதிதிராவிட நலத்துறை அரசினர் மாணவியர் விடுதியில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவியர்களுக்கு உணவு பரிமாறினார். பின்னர் மாணவியர்ளுடன் அமர்ந்து ’பகுத்துண்டு பள்ளுயிர் ஓம்புதல் நூளோர்க்கு தொகுத்துவற்றுள் எல்லாம் தலை’ என்ற திருக்குறளைகூறி உணவு உட்கொண்டார்
அப்போது. கலெக்டர் உட்கொண்ட ரச சாதம் தாளிக்காமலும், கொத்தமல்லி இல்லாமலும் இருந்தது. உடனே, சமையலரிடம் ஏன் ரசத்தில் கொத்தமல்லி இல்லை? என கேட்டார். அதற்கு அவசர அவசரமாக உணவு செய்ததால் கொத்தமல்லி போடவில்லை என அவர் கூறினார். அந்த பதிலால் கடுப்பான கலெக்டர், இதுபோல் திரும்பவும் நந்தால் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டோஸ் விட்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆதி திராவிட நலத்துறை அலுவலர் ஜெயக்குமார், அரசு அதிகாரிகள் மற்றும் விடுதி காப்பாளர்கள் சமையலற்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க | மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாள்: ஈஸியான ஆன்லைன் வழிமுறை இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ