சென்னை-திருப்பதி இடையே பக்தர்கள் வசதிக்காக நிரந்தர விடுதிகள்

சென்னை மற்றும் திருப்பதி இடையே பக்தர்களுக்காக நிரந்தர விடுதிகள் அமைக்கப்படும் என TTD தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 5, 2021, 08:53 AM IST
சென்னை-திருப்பதி இடையே பக்தர்கள் வசதிக்காக நிரந்தர விடுதிகள் title=

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான உள்ளூர் ஆலோசனைக்குழு தலைவராக ஏ.ஜெ.சேகர் ரெட்டி, 2வது முறையாக நியமிக்கப்பட்டு உள்ளார். 

இதற்கிடையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (Tirumala Tirupati Devasthanams) அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி, சென்னையில் உள்ள TTD வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு நேற்று வந்து அங்கு புதிய பொறுப்புக்கான பணி ஆணையை வழங்கினார். பின்னர் நிருபர்களிடம் பேசிய சுப்பாரெட்டி கூறியதாவது.,

ALSO READ | காவாளம்: திருப்பதி உண்டியல் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்

சென்னை தியாகராயநகரில் பத்மாவதி தாயார் கோவில் கட்டுமான பணி வேகமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் ஓராண்டில் நிறைவடைந்து, விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.

அதேபோல பக்தர்கள் நலன் கருதி சென்னை-திருப்பதி வழித்தடத்தில் 3 இடங்களில் நிரந்தர முகாம்கள் அமைக்கப்பட இருக்கிறது. இதில் நடைபயணமாக வரும் பக்தர்கள் தங்கி, ஓய்வு எடுத்து செல்லலாம். அங்கேயே சமைத்து சாப்பிட்டுவிட்டும் செல்லலாம். குளியலறை, கழிவறை, ஓய்வறை என அனைத்து சேவைகளும் இலவசமாகும். அடுத்த புரட்டாசி மாதத்தில் ஒன்று அல்லது இரண்டு விடுதிகளாவது நிச்சயம் அமைக்கப்பட்டிருக்கும் என்று உறுதியளிக்கிறோம்.

சென்னையில், திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் புதிய கோவில் கட்டுவதற்காக பழைய மகாபலிபுரம் சாலை (ஓ.எம்.ஆர்.), கிழக்கு கடற்கரை சாலை (இ.சி.ஆர்.) என 2 இடங்களை தமிழக அரசு ஒதுக்கி தந்துள்ளது. இந்த இடங்கள் வாஸ்து சாஸ்திரப்படி இருக்கிறதா என்பது குறித்து ஆராய்ந்து, தகுந்த இடத்தை தேர்வு செய்து தமிழக அரசிடம் அளிப்போம். அதன்பின்பு அரசு அனுமதி அளித்த உடன் கோவில் கட்டுமான பணி தொடங்கப்படும். இதற்காக விரைவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளோம் என்று கூறினார். 

ஏ.ஜெ.சேகர் ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது., சென்னை ராயப்பேட்டையில் உள்ள தேவஸ்தானத்துக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் ஏழை மக்கள் நலனுக்காக திருமண மண்டபம் கட்டித்தர திட்டமிட்டுள்ளோம். திருப்பதி அடிவாரத்தில் பசுக்கள் கோவில் திறக்கப்பட இருக்கிறது. இங்கு நிறுவப்படவுள்ள ‘கோ துலாபாரம்’ (பசுக்கள் எடையில் காணிக்கைகளை வழங்கும் தராசு) உலகளவில் பிரசித்தி பெறப்போகிறது. இந்த கோவிலை ஆந்திரா முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி வருகிற 11-ந்தேதி திறந்து வைக்கவுள்ளார்.

என் மீது விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இதை பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை. என்னிடம் தெய்வ சக்தி உள்ளது. அதன்முன்பு மனித சூழ்ச்சிகள் எதுவும் எடுபடாது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் அதிரடி முயற்சியில் கோடிக்கணக்கில் மதிப்புடைய கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வருவது பாராட்டத்தக்கது என்று தெரிவித்த்துள்ளார்.

ALSO READ | TTD: திருப்பதிக்கு காணிக்கையாக கிடைத்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் நிலை என்ன

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News