பாஜக சட்டமன்ற குழு தலைவராக நயினார் நாகேந்திரன் அவர்கள் தேர்வு

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில்,  அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக, 4 இடங்களில் வெற்றி பெற்றது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : May 9, 2021, 05:30 PM IST
  • பாஜக சார்பாக போட்டியிட்ட, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி, டாக்டர் சி,கே சரஸ்வதி ஆகியோர் வெற்றி பெற்று எம் எல் ஏ ஆகியுள்ளனர்.
  • 20 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக பாஜக எம் எல் ஏக்கள் சட்டபேரவையில் காலடி எடுத்து வைக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.
பாஜக சட்டமன்ற குழு தலைவராக நயினார் நாகேந்திரன் அவர்கள் தேர்வு title=

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில்,  அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக, 4 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக சார்பாக போட்டியிட்ட, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி, டாக்டர் சி,கே சரஸ்வதி ஆகியோர் வெற்றி பெற்று எம் எல் ஏ ஆகியுள்ளனர். 20 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக பாஜக எம் எல் ஏக்கள் சட்டபேரவையில் காலடி எடுத்து வைக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில், பாஜக சட்டமன்ற தலைவர்ரை தேர்தெடுக்கும் கூட்டம் கமலாலயத்தில் நடைபெற்றது. கூட்டம், மாநில தலைவர் டாக்டர் திரு.எல்.முருகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது, தேசிய பொதுச்செயலாளர் திரு.C.T.ரவி அவர்கள், மத்திய இணையமைச்சர் ‌திரு.கிஷன்ரெட்டி அவர்கள், திரு.சுதாகர் ரெட்டி மற்றும் பாஜக சார்பில் புதிதாக தேர்ந்தெடுக்க சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பாஜக சட்டமன்ற குழு தலைவராக மாநில துணைத்தலைவரும், திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினருமான திரு.நயினார் நாகேந்திரன் அவர்கள் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்

ALSO READ | அஸ்ஸாம் மாநில முதல்வராக நாளை ஹிமாந்தா பிஸ்வா சர்மா பதவி ஏற்கிறார்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News