எங்களை சங்கி என சொல்பவர்களுக்கு திகார் ஜெயில் தயாராக உள்ளது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கோபம்

நாங்கள் சங்கி கிடையாது. சங்கி என்று சொல்பவர்களுக்கு திகார் ஜெயில் தயாராக உள்ளது. எதிர்கட்சியை எச்சரிக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 4, 2020, 03:02 PM IST
எங்களை சங்கி என சொல்பவர்களுக்கு திகார் ஜெயில் தயாராக உள்ளது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கோபம் title=

Chennai: இன்று சென்னை நந்தனம் ஆவின் ஹவுஸில் தீபாவளி சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனையை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி (K. T. Rajenthra Bhalaji) தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தாய்ப்பாலுக்கு நிகரான பாலை ஆவின் வழங்குகிறது. கொரோனா தொற்றுக்கு அமெரிக்க அதிபரே பயந்து இருக்கும் நிலையில், ஆவின் ஊழியர்கள் பயப்படவில்லை என புழந்து பேசினார். 

அதன் பிறகு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் "சங்கி" என்று அழைத்ததுக் குறித்து கேட்டதற்கு, நாங்கள் சங்கி கிடையாது. சங்கி என்று சொல்பவர்களுக்கு திகார் ஜெயில் தயாராக உள்ளது. கடவுள் பக்தியில் அதிமுகவும், பாஜகவும் ஒன்று. அதிமுக கூட்டணி கட்சி தான் பாஜக. வேல் யாத்திரை நடத்த பாஜகவுக்கு உரிமை உண்டு.

திமுக தலைவர் ஸ்டாலின் தனது தேர்தல் வெற்றிக்காக பிரஷாந்த் கிசோரை நம்பியிருக்கிறார். அவர் கூறியது போல சாத்தூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. விவகாரம் அதிமுக உட்கட்சி பிரச்சனை என்றும் கூறினார். 

ALSO READF | ஸ்டாலினைக் கொச்சைப்படுத்தி சுவரொட்டி - முதலமைச்சரை எச்சரிக்கும் துரைமுருகன்

முன்னதாக "தமிழகம் மீட்போம்" என்ற வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் 2021 பிரச்சாரச் சிறப்புக் கூட்டத்தில் காணொளி வாயிலாக பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் (MK Stalin). அ.தி.மு.க. அரசு எப்படி செயல்படுகிறது என்பதற்கு ஒரே ஒரு உதாரணம் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திர பாலாஜி போதும். இசுலாமியர்களைக் கொச்சைப்படுத்தி பேசுவது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அரட்டல், உருட்டல், மிரட்டல் செய்யும் அமைச்சராகவே வலம் வருகிறார். அதிமுகவில் பாஜக அணி என்று ஒன்று இருக்கிறது. இந்த அணியின் முக்கிய நபர்களாக ராஜேந்திர பாலாஜி மற்றும் மாபா பாண்டியராஜன் இருக்கின்றனர் எனக் கடுமையாக சாடினார். மேலும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் கூட அடக்க முடியவில்லை. மக்கலம் மற்றும் திமுகவால் தான் அவரை அடக்க முடியும் என்றும் ஸ்டாலின் கூறினார்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News