தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை

Last Updated : May 10, 2017, 10:23 AM IST
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை title=

அக்னி வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. 

கோடை காலம் தொடங்கிய நாள் முதலே தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் வெப்பத்தின் தாக்கதை குறைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் வெப்பம் சற்று தனிந்ததில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளி்லும் பரவலாக மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் மரம் வெட்டும் தொழிலாளி உயிரிழந்துள்ளார். 

இதே போல் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி, எளியார்பட்டி, காலான்பட்டி கிராமங்களில் மின்னல் வெட்டி தாக்கியதில் 10 வயது சிறுவன் உட்பட 2 பெண்கள் உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே மின்னல் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்தனர். 

Trending News