WOW... தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை; மகிழ்ச்சியில் மக்கள்!!

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!

Last Updated : Apr 16, 2019, 03:21 PM IST
WOW... தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை; மகிழ்ச்சியில் மக்கள்!! title=

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக இயல்பை விட வெப்பம் அதிகமாக இருந்து வருகிறது. வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்பட 12 மாவட்டங்களில் அடுத்த 4 தினங்களுக்கு இயல்பை விட வெப்பம் 2டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு உள்கர்நாடகாவில் இருந்து உள் தமிழகம் வழியாக குமரிமுனை வரை வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருவதால், தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஆயக்குடியில் 1செ.மீ மழை பதிவாகி உள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன்  இருக்கும் என்றும், அதிகப்பட்ச வெப்பநிலை 36டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

 

Trending News