சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வருகிற அக்டோபர் 2ஆம் தேதி தமிழக முழுவதும் சமூக நல்லிணக்க பேரணி நடத்துவதாக கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அறிவித்திருந்த நிலையில் பேரணி நடைபெறும் இடங்களில் உரிய பாதுகாப்பு மற்றும் அனுமதி வழங்க கோரி தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவை நேரில் சந்தித்து மனு அளித்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் இந்த பேரணி தொடர்பான பல விஷயங்களைப் பகிர்ந்துக் கொண்டார்..
எதிர்வரும் அக்டோபர் இரண்டாம் தேதியன்று, அனைத்து ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து சமூக நல்லிணக்க பேரணியை நடத்த உள்ளோம் என்றும் தமிழகத்தை சனாதான சன்பரிவார் கும்பல் குறி வைத்து இங்கு சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், வன்முறையை தூண்டுவதற்கு சதி திட்டம் தீட்டி வருவதாக திருமாவளவன் குற்றம் சாட்டினார்.
திமுக அரசு மீது தினமும் ஒரு குற்றச்சாட்டை வைத்து வருவதாகவும் திமுகவுக்கு அடுத்தபடியாக அதிமுக அல்ல நாங்கள் தான் என்ற எண்ணத்தை உருவாக்கும் பொருட்டு, பாஜக, அதிமுகவை பின்னுக்கு தள்ளுவதற்காக செய்து வருவதாக திருமாவளவன் தெரிவித்தார்.மேலும், தமிழகத்தில் அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி பிறந்த நாள் என்று ஆர் எஸ் எஸ் பேரணி நடத்துவதற்கான தேவை என்ன? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் படிக்க | தமிழ்நாட்டைக் குறிவைக்கும் சனாதனப் பயங்கரவாதத்தை முறியடிப்போம் - விசிக
தமிழகத்தில், உள்ளோக்கத்தோடு தான் ஆர்எஸ்எஸ் தனது காய்களை நகர்த்தி வருவதாக தெரிவித்த திருமாவளவன், வன்முறைகளை கட்டவிழிக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டினார். மதத்தின் பெயரால், இந்துக்களை பிளவுப்படுத்த வேண்டும் என்று தான் அக். 2ம் தேதியை அவர்கள் தேர்வு செய்துள்ளனர் எனக் கூறினார்.
காந்தியடிகளை படுகொலை செய்த கும்பல், இந்த அணிவகுப்பை நடத்த உள்ளதாகவும், அதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து இருந்தாலும், தமிழக அரசு, பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு இடம் அளிக்க கூடாது என்றும் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் திருமாவளவன் வலயுறுத்தினார்.
முதல் முறையாக விடுதலை சிறுத்தைகள் கட்சி, சமூக நல்லிணக்க பேரணியை நடத்துவதாகவும், இந்தப் பேரணிக்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு இன்று டிஜிபியை சந்தித்ததாகவும் கூறிய அவர், ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி அளிப்பதன் மூலம் தமிழகத்தில் வன்முறை ஏற்பட வழி வகுக்கும் என்று தெரிவித்தார்.
வட இந்தியாவில் அவர்கள் நடத்திய பேரணிகளில் எவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டது என்பது எல்லோரும் அறிந்த ஒன்று என்று தெரிவித்த அவர், விசிக சார்பில் நடைபெறும் சமூக நல்லிணக்க பேரணிக்கு அனுமதி கிடைக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.
மேலும் படிக்க | சென்னையில் 11 வயது பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை
தமிழகத்தில் நடைபெற்று வரும் பெட்ரோல் குண்டு வீச்சு ஏற்கதக்கது அல்ல என பேசிய தொல்.திருமாவளவன், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் எனவும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் கேட்டுக்கொண்டார்.
இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் எத்தனை முறை தடை செய்ப்பட்டர்கள் என்பது நாடு அறிந்த உண்மை என கூறிய திருமாவளவன், தமிழகத்தில் வன்முறைக்கு வழிவகுக்கத்தான் அக்டோபர் 2ஐ ஆர்எஸ்எஸ் தேர்வு செய்துள்ளதாகவும், பெட்ரோல் குண்டு வீச்சிக்கு பின்னால் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் இருக்க வாய்ப்புள்ளது அதை காவல் துறை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தமிழகத்தில் பாஜக வளர்ச்சி பெற்றதாக சொல்ல முடியாது, அவர்கள் மக்களை நெருங்குவதற்காக தான் வன்முறையை தேடுவதாகவும், வன்முறை மூலமாகவே மக்களை அணுகுகிறார்கள் என்று விமர்சனம் செய்த திருமாவளவன், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக தொடர்ந்து முஸ்லிம்கள் மீதுவெறுப்பை விதைத்து வருகிறது என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு அயல்நாட்டில் உள்ளவர்களுக்கு தொடர்பு இருந்தால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றும் தடை செய்ய கூடிய அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது என்றால் ஏன் அவர்கள் இன்று வரை தடை செய்யவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.
ஐஎஸ் அமைப்போடு தொடர்பு இருந்தால் அந்த அமைப்புகளை தடை செய்யலாம், ஆனால், அரசியல் செய்வதற்காக இந்த நாடகத்தை ஆடுகிறது பாஜக என்று கூறிய அவர், தமிழகத்தில் திமுக அரசை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பாஜக கணக்கு போடுவதாகவும், பாஜக கணக்கு தப்பு கணக்கு என்று கூறிய அவர், வட இந்தியாவை போல் தமிழகத்தை பாஜக கருதுகிறது. ஆனால், தமிழக மக்கள் உரிய நேரத்தில் பாஜகவிற்கு தக்கப் பாடம் கற்பிப்பார்கள் என்றும் கூறினார்.
மேலும் படிக்க | தீண்டாமையை கடைபிடிக்கும் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரை நீக்குக
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ