Minister Ma Subramanian About H3N2 Flu: சென்னை ஐஐடி வளாகத்தில் தற்கொலை மற்றும் சாலை விபத்துகளுக்கான ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டது. அந்த ஆய்வு அறிக்கையை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், ஐஐடி நிர்வாக இயக்குநர் காமகோடி ஆகியோர் வெளியிட்டனர்.
இந்திய அளவில் சாலை விபத்தில் ஒரு ஆண்டிற்கு ஒன்றரை லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். தமிழ்நாட்டில் 17 ஆயிரம் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர் என்பது குறித்த அந்த ஆய்வறிக்கையானது இன்று வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,"வைரஸ் காய்ச்சல் தடுப்பதற்கு ஆயிரக்கணக்கான முகாம்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. யாராவது ஒருவருக்கு கிராமத்தில் காய்ச்சல் இருந்தாலும் கிராமம் முழுவதும் சோதனை செய்யப்படுகிறது.
மேலும் படிக்க | ஆழியார் அணையில் குறைந்த நீர்மட்டம்! வெளியே தெரியும் ஆங்கிலேயர் கல்பாலம்!
கொரோனா மரணம்
தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுப்பு விட அவசியம் இல்லை. தமிழ்நாட்டில் காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் இல்லை, தேவையற்ற பதட்டத்தை ஏற்படுத்த வேண்டாம். திருச்சியில் இளைஞர் கொரோனா தொற்றால் உயிரிழந்தது குறித்து டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. அந்த மாதிரி, பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவு வந்ததும் அதில், எதனால் உயிரிழந்தார் என்பது குறித்த முழு விவரங்கள் தெரியவரும்" என்றார்.
இந்நிகழ்வில் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர், காமகோடி,"செப்டம்பர் மாதம் 2022ஆம் தேதியில் இருந்து இது வரைக்கும் 3 தற்கொலைகள் (ஐஐடியில்) நடந்து உள்ளது, வருத்தம் அளிக்கிறது. உடல் நலம், தனிப்பட்ட விஷயம், அகாடமி படிப்பு விஷயம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்கொலைகள் நடந்துள்ளது. தற்கொலையை தடுக்க ஐஐடி, குழு அமைத்து நடவடிக்கை எடுத்து வருகிறது" என்றார்.
எதன்மூலம் அதிக தற்கொலை?
அதே நிகழ்வில் அமைச்சர் மா. சுப்பிரமணியன்,"உலக சுகாதார அமைப்பு, உலகளவில் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர், என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் 1 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்பது வருத்தம் அளிக்கிறது. தற்கொலை தமிழ்நாட்டில் அதிகம் நடப்பதற்கு, காரணத்தை அறிய மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் கேட்டபோது, எலி மருந்து, சாணி பவுடர் ஆகியவற்றை தான் அதிகம் பயன்படுத்தி தற்கொலை மேற்கொள்கின்னர். இவை மீது தடை விதிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டோம்.
தமிழ்நாடு அரசின் சார்பில் 6 பூச்சி கொல்லி மருந்துகளுக்கு தற்காலிக தடை விதிக்க பட்டுள்ள நிலையில், சாணி பவுடர் க்கும் தடை விதிக்க வேண்டும் என்று அறிக்கை அனுப்பியுள்ளோம். பயிர்களுக்கு அளிக்கும் பூச்சி மருந்து வாங்க , தனியாக வரும் நபர்களுக்கு மருந்து தர கூடாது. கூட்டமாக வருபவர்களுக்கு மட்டும் தர வேண்டும் என்று அறிவித்துள்ளோம். தற்கொலையை தடுக்க இந்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
'மனம்'
மனம் என்கிற திட்டம் மூலம் மனநலம் பாதிக்கபட்டவர்களுக்கும், அதில் இருந்து மீண்டு வருவதற்கும், தற்கொலைக்கு முயல்வபவர்களுக்கும் தடுக்க இத்திட்டம் பயனுள்ளதாக உள்ளது. உயர்கல்வி துறையுடன் பேசி விரைவில் கலை அறிவியல் கல்லூரிகளிலும் மனம் திட்டம் தொடங்க உள்ளது.
ஐஐடியில் நடைபெற்ற தற்கொலை குறித்து கேள்விக்கு,"இந்த தற்கொலை சம்பவம் கேட்டு ஒரு தந்தையாக இயக்குநர் வருந்தியுள்ளார். இனிமேல் இதுபோன்று நடக்காமல் இருப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அமைச்சர் மா சுப்ரமணியன் வேண்டுகோள்
தற்கொலை என்பது தீர்வல்ல, நம் வாழ்வது நம் கையில் தான் உள்ளது. மாணவர்களாக இருந்தாலும் யாராக இருந்தாலும் தற்கொலை என்பது 100% தவிர்க்க வேண்டும். தமிழக அரசின் சார்பில் 6 பூச்சி கொல்லி மருந்துகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில். நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது" என்றார்.
மேலும் படிக்க | தமிழகத்தில் 9 ஆம் வகுப்பு இறுதி தேர்வை முன்கூட்டி நடத்த திட்டம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ