சசிகலா, தினகரனை அதிமுகவில் இணைக்க வேண்டும். அதில் மாற்றம் இல்லை -தேனி மாவட்ட செயலாளர்

சசிகலா மற்றும் தினகரனை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்பதை தேனி மாவட்ட அதிமுக சார்பாக தொடர்ந்து வலியுறுத்துவோம் - மாவட்டம்

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Shiva Murugesan | Last Updated : Mar 5, 2022, 12:46 PM IST
சசிகலா, தினகரனை அதிமுகவில் இணைக்க வேண்டும். அதில் மாற்றம் இல்லை -தேனி மாவட்ட செயலாளர் title=

அதிமுக தலைமை எடுக்கின்ற முடிவு எதுவானாலும் கட்டுப்படுவோம். ஆனால் சசிகலா மற்றும் தினகரன் விவகாரத்தில் தலைமை மாறாக முடிவெடுத்தாலும், அவர்களை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்பதை தேனி மாவட்ட அதிமுக சார்பாக நாங்கள் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருப்போம் என தேனி மாவட்ட செயலாளர் சையது கான் தெரிவித்துள்ளார்.

தற்போது நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வியினை சந்தித்த நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அதிமுக ஒருங்கினைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சொந்தமான கைலாசபட்டியில் உள்ள பன்னை வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேனி மாவட்ட அதிமுக நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் அதிமுக தேனி செயலாளர் சையது கான் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கினைபாளர் ஓ.பன்னீர் செல்வமும் கலந்து கொண்டார்.

மேலும் படிக்க: சசிகலா சுற்றுப்பயணம்.. உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள்

இந்த கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் பேசும் போது அதிமுக பல்டுதோல்வியை சந்தித்தற்கு பெரும்காரணமாக இருந்தது அமமுக என்றும், எனவே அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை எவ்வித நிபந்தனையும் இன்றி கட்சியில் மீண்டும் சேர்ந்து கொள்ள வேண்டும் என கட்சியினர் வலியுறுத்தினார்கள். இது தொடர்பாக தீர்மானமும் போட்டப்பட்டிந்தது. அதுவும் குறிப்பாக சசிகலா மற்றும் தினகரனை குறி வைத்தே இந்த தீர்மானம் போடப்பட்டு உள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பும் ஏற்பட்டது.

இது தொடர்பாக இன்று முறைப்படி தேனி மாவட்டத்தில் அதிமுகவினர் செயல்வீரர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்ட்டு உள்ளதா கூறப்பட்ட நிலையில், அது மாதிரியான கூட்டம் இன்று ஏதும் நடைபெறவில்லை. 

மேலும் படிக்க: சசிகலா அவர்களே வருக.. ஓபிஸ்-ஈபிஸ் அவர்களே வெளியேறுக -ஒன்றுகூடும் அதிமுக நிர்வாகிகள்

இது குறித்து தேனி மாவட்ட செயலாளர் சையது கானிடம் நமது செய்தி தொடர்பாளர் ஜாப்பார் தொடர்பு கொண்டு கேட்டபோது, "எங்களது எண்ணங்களை தலைமைக்கு தெரிவித்திருக்கின்றோம். தலைமையின் முடிவுக்காக காத்திருக்கிறோம். தலைமையின் முடிவு வந்தபின் அடுத்த கட்டம் குறித்து முடிவெடுப்போம்.

மேலும் தலைமை எடுக்கின்ற முடிவு எதுவானாலும் கட்டுப்படுவோம். தலைமை மாறாக முடிவெடுத்தாலும் நாங்கள் சசிகலா மற்றும் தினகரனை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்பதை தேனி மாவட்ட அதிமுக சார்பாக தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருப்போம் என்றார்.

மேலும் படிக்க: சமாதானம் ஆனார் ஓபிஎஸ்? அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் ரத்து!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News