மீண்டும் தவறான கேள்வி; சர்ச்சையில் Group IV தேர்வு வினாத்தாள்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குருப் IV தேர்வில் தவறாக இடம்பெற்ற கேள்விகளுக்கு மதிப்பெண்கள் அளிப்பது குறித்து ஆய்வு செய்ய வல்லுநர் குழு அமைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது!

Last Updated : Sep 2, 2019, 07:45 PM IST
மீண்டும் தவறான கேள்வி; சர்ச்சையில் Group IV தேர்வு வினாத்தாள்! title=

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குருப் IV தேர்வில் தவறாக இடம்பெற்ற கேள்விகளுக்கு மதிப்பெண்கள் அளிப்பது குறித்து ஆய்வு செய்ய வல்லுநர் குழு அமைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது!

தமிழ்நாடு முழுவதும் நேற்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குருப் IV தேர்வினை நடத்தியது. இந்த தேர்வின் மூலம் கிராம நிர்வாக அலுவலர், நில அளவையர், தட்டச்சர், இளநிலை உதவியாளர் ஆகிய 6 ஆயிரத்து 491 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 

இருநூறு கேள்விகளுக்கு ஒன்றரை மதிப்பெண் என்கிற அடிப்படையில் முந்நூறு மதிப்பெண்களுக்கு இந்த தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வினை நேற்று 13 லட்சம் பேர் எழுதியுள்ளனர். இந்தத் தேர்விற்கான வினாத்தாளில் நான்கு கேள்விகள் குளறுபடியாக இடம்பெற்றிருந்தது. 

எடுத்துக்காட்டாக, பொருத்துக பகுதியில் குடியரசு தினம் டிசம்பர் 1946 என்று கேட்கப்பட்டிருந்தது. சில கேள்விகளில் மொழிப்பெயர்ப்புகளும் தவறாக இடம் பெற்றிருந்தது. 

இந்நிலையில் குளறுபடியான கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து வல்லுநர் குழு அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. மேலும் செப்டம்பர் 3-ஆம் தேதி முதல் ஒருவார காலத்திற்கு தேர்வர்கள் குரூப் IV தேர்வில் கேட்கப்பட்டுள்ள கேள்விகள், விடைகள் குறித்த தங்களது சந்தேகங்களை அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு தெரியப்படுத்தலாம் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது. 

தேர்வர்களிடம் இருந்து பெறப்படும் கருத்துகளை வல்லுநர் குழு ஆராய்ந்து தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து முடிவெடுக்கும் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. மேலும் தேர்வின் போது கேள்விகளுக்கு தவறாக விடையளித்துவிட்டு அதனை ஒயிட்னர் (whitener) கொண்டு அழித்துவிட்டு மீண்டும் பதில்களை சில தேர்வாளர்கள் பதிவு செய்திருந்தால், மீண்டும் பதிவு செய்யப்பட்ட பதில் சரியானதாகவே இருந்தாலும் கணினி அதனை ஏற்றுக்கொள்ளாது என அரசு பணியாளர் தேர்வாணையம் குறிப்பிட்டுள்ளது.

Trending News