ஒற்றைத் தலைமை கோரிக்கை வருத்தம் தருகிறது - ஓபிஎஸ்

ஒற்றை தலைமை கோரிக்கை வருத்தம் தருவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 16, 2022, 08:48 PM IST
  • ஒற்றை தலைமை பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஓபிஎஸ்
  • இரட்டை தலைமை தொடரும் என விளக்கம்
 ஒற்றைத் தலைமை கோரிக்கை வருத்தம் தருகிறது - ஓபிஎஸ் title=

அதிமுகவில் இரட்டை தலைமை இருந்துவந்த சூழலில் ஒற்றை தலைமை பிரச்னை தலை தூக்கியது. இதில் ஓபிஎஸ் அரசியல் வாழ்க்கையை இபிஎஸ் ஒழிக்க பார்ப்பதாகவும், அதிமுகவுக்குள் அடுத்தக்கட்ட பூகம்பம் ஆரம்பம் எனவும் கூறப்பட்டது.

23ஆம் தேதி நடக்கவிருக்கும் அதிமுக பொதுக்குழுவில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என கணிக்கப்பட்டது. அதற்கேற்றார்போல் இபிஎஸ் தரப்பும் ஓபிஎஸ் தரப்பும் தனித்தனியாக இன்று ஆலோசனையில் ஈடுபட்டன.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் பேசுகையில், “தொண்டர்களுக்காக இயக்கமாக தான் அதிமுக தொடங்கப்பட்டது.  பொதுச்செயலாளர் பதவி என்பது எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா அவர்கள் வகித்த பதவி. 6 ஆண்டுகாலம் நானும், பழனிசாமியும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இருவரும் இருக்கிறோம்.

Panneerselvam

துணை முதலமைச்சர் பதவிக்கு எந்த அதிகாரமும் இல்லை. இருந்தாலும் கட்சி நன்மைக்காக பிரதமர் கேட்டுக்கொண்டதால் நான் அதனை ஏற்றுக்கொண்டேன்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னால் பொதுச்செயலாளர் பதவி அவருக்கு மட்டுமே உரியது என்று நானும் இபிஎஸ்ஸும் முடிவு செய்தோம். தொடக்கத்தில் இரட்டை தலைமை குறித்து நான் அவரிடம் கேட்டபோது இது புதிதாக இருக்கிறதே என்று கூறினார்.

நான் தொண்டர்களை காப்பாற்றவே இந்த இயக்கத்தில் இருக்கிறேன். நாம் ஒற்றுமையாக பணியாற்றி மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டு. இதுவே நமது தலையாய கடமை

இரட்டைத் தலைமை நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. பொதுச்செயலாளர் பதவி யாருக்காவது கொடுக்கப்பட்டால் அது ஜெயலலிதாவிற்கு செய்கின்ற மிகப்பெரிய துரோகம்.

Panneerselvam

முன்னாள் ஜெயக்குமார் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்ததால் மட்டுமே ஒற்றை தலைமை பிரச்னை பூதாகரமாக வெடித்ததாக கருதுகிறேன். அனைத்தும் நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது ஏன் திடீரென்று இந்த ஒற்றை தலைமை குழப்பம் வந்தது என்று தெரியவில்லை.

மேலும் படிக்க | தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிப் பதவிக்கு போட்டிபோடும் ‘எதிர்க்கட்சிகள்’!

நாங்கள் ஒருங்கிணைத்து ஒற்றுமையாக செயல்பட பேச்சுவார்த்தை நடக்கிறது. நான் அனைத்திற்கும் தயாராகத்தான் இருக்கிறேன். ஒற்றை தலைமை குறித்து பேசியவர்களை நானும் பழனிசாமியும் கண்டிக்க வேண்டும். ஒற்றை தலைமை இப்போது தேவையில்லை. பிற்காலத்தில் தேவைப்பட்டாலும் தேவைப்படலாம்.

Panneerselvam

எனக்கு எதிராக அதிமுகவில் எந்தக் குழுவும் செயல்படவில்லை இந்த ஒற்றை தலைமை பிரச்னை எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. ஜெயலலிதா மறைவிற்குப்பின் தற்காலிக ஏற்பாடாக கட்சியை வழிநடத்தவே சசிகலா பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்” என்றார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News